சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இப்போ எல்லாம் நைட்டுல கதவை தட்ட மாட்டாங்களான்னு ஏங்குறேன் என உருக்கமாக பேசியுள்ளார்.
நடிகர் விஜய்யுடன் சந்திரலேகா படத்தில் நடிக்க ஆரம்பித்தது முதல் நடிகர் ரஜினியுடனே வாக்குவாதம் செய்யும் விஷயங்கள் வரை பல சுவாரஸ்ய த்ரோபேக் சம்பவங்களை தனது மகளுடன் இணைந்துக் கொண்டு அந்த பேட்டியில் பேசி உள்ளார் வனிதா விஜயகுமார்.
மல்லி பெல்லி படத்தில் நடித்த நிலையில், அடுத்து எப்போ திருமணம் என பலரும் கேட்டு தொல்லை பண்றாங்க என்றும் கூறியுள்ளார்.
அப்பாவிடமிருந்து எஸ்கேப்பான விஜய்: சந்திரலேகா படத்தில் இருந்து எடுத்த ஸ்டில்லை தொகுப்பாளர் காண்பிக்க, இந்த படம் தான் முதன்முதலில் நடிகர் விஜய் அவரோட அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரிடம் இருந்து எஸ்கேப் ஆகி தனியாக நடித்த படம்.
ரஜினி அங்கிள் படத்தின் பூஜைக்கு கிளாப் அடிக்க வந்திருந்தார். ஏகப்பட்ட திரை ஜாம்பவான்கள் சூழ்ந்திருக்க திரும்பி பார்க்கிறேன் விஜய் வந்து நிக்கிறாரு, அப்போவே அவரிடம் ஒரு ஆரா தெரிந்தது. நிச்சயம் இந்த மனுஷன் பெரிய ஆளா வருவாருன்னு நினைச்சேன் இன்னைக்கு அவரோட ரேஞ்சே வேற என பேசியுள்ளார் வனிதா விஜயகுமார்.
ரஜினி அங்கிளுடன் சண்டை போடுவேன்: ரஜினி அங்கிள் படத்தில் ஏதாவது பிடிக்கலைன்னா டைரக்ட்டா அவர்கிட்டயே கேட்டு விடுவேன், செல்லமா ரொம்ப சண்டை போடுவேன். எங்க அம்மா என்னை அதட்டிட்டே இருப்பாங்க.. ஆனால், அவர் ரொம்ப கூலாக, ஏன்மா என்ன பிரச்சனை என அழகாக கேட்பதே நல்லா இருக்கும்.
அதே போல சிவாஜி பெரியப்பா என்னை பார்த்து இப்படியே குண்டா இரு, நாம எல்லாம் இளைத்தால் நல்லாவே இருக்காதுன்னு சொல்லி கிண்டல் பண்ணுவாரு என்று தனது பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்துள்ளார்.
சினிமாவை திருமணம் செய்துக் கொண்டேன்: விஜய்யுடன் நான் நடித்த சந்திரலேகா படத்தில் சரத்பாபு எனக்கு அப்பாவாக நடித்திருந்தார். அவருடைய கடைசி படமான மல்லி பெல்லி படத்தில் எனக்கு மாமனாராக நடித்திருந்தார்.
மல்லி பெல்லி என்றாலே மறுபடியும் திருமணம் என்பது தான் அர்த்தம். எனக்குன்னு வந்து வாய்க்குது பாரு டைட்டில் என நினைத்துக் கொண்டிருந்த போது, மீண்டும் உங்களுக்கு திருமணமாமேன்னு சிலர் தொல்லைக் கொடுக்க, ஆமாம், சினிமாவை திருமணம் செய்துக் கொண்டேன் என சொல்லி விட்டேன். அதையும் யூடியூப்களில் வனிதா மறுபடியும் திருமணம் பண்ணிக் கொண்டார் என தம்ப்னைல் வைத்து டிரெண்ட் செய்து விட்டனர் என்றார்.
நைட்டு இப்போ கதவ தட்ட யாருமே இல்லை: தனது அம்மா மறைந்த நடிகை மஞ்சுளா குறித்து உருக்கமாக பேசிய வனிதா விஜயகுமார், நைட் 2 மணிக்கு போன் பண்ணுவாங்க, பண்ணிட்டு என்ன பண்றேன்னு கேட்பாங்க, ரெண்டு மணிக்கு என்ன பண்ணுவேன், தூங்குறேன் போனை வைம்மான்னு கத்துவேன்..
வீட்ல இருக்கும் போதும் அதே போலத்தான் நைட்டு வந்து கதவை தட்டுவாங்க.. என்ன பண்றேன்னு கேட்பாங்க.. அப்போதெல்லாம் செம கடுப்பா இருக்கும். ஆனால், அம்மா இறந்த பிறகு பல இரவுகளில் தூக்கமில்லாமல் எழுந்து அழுதிருக்கேன். இப்போதெல்லாம் கதவை தட்டி விசாரிக்க யாருமே இல்லையேன்னு அந்த பேட்டியில் வனிதா உருக்கமாக பேசியுள்ளார்.