‘கக்கன்’ வாழ்க்கை வரலாறு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். பொது வாழ்வில் எளிமையையும், நேர்மையையும் தனது கடைசி மூச்சு வரை கடைபிடித்த அரசியல் தலைவர் கக்கன். காங்கிரஸ் கட்சியின் முன்னோடி தலைவர்களில் ஒருவரான இவரது வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக்கப்பட்டு வருகிறது. பிரபு மாணிக்கம் இயக்கி வரும் “கக்கன்” திரைப்படத்தை சங்கர் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. தேவா இசை அமைக்கும் இந்த படத்திற்கு […]