சந்திரயான் 3ன் நிலவுக்கான பயணத்தின் அடுத்தக்கட்டம்… இஸ்ரோ கொடுத்த அசத்தல் அப்டேட்!

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் கடந்த 14ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவாண் ஏவுதளத்தில் இருந்து எல்விஎம் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த சந்திராயன் – 3 விண்கலம் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

விண்ணில் செலுத்தப்பட்டதும் குறைந்தபட்சம் 170 கி.மீ தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ தொலைவும் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏய்… ஏப்புட்றா.. ஒரு நாள் கூட லீவு போடல… ஆனா 50 நாடுகளுக்கு டூர்…. அசத்தும் 10 வயது இந்திய சிறுமி!

அதன்படி சந்திரயான் – 3 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை இதுவரை 4 முறை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த 21ஆம் தேதி சந்திரயான் – 3 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை நான்காவது முறையாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக சந்திரயான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதன்படி, சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி பெங்களூரு ISTRAC/ISRO இலிருந்து வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சந்திரயான் – 3 விண்கலம் 127609 கிமீ x 236 கிமீ சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கண்காணிப்புக்குப் பிறகு அடையப்பட்ட சுற்றுப்பாதை உறுதிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை… கோரத் தாண்டவம் ஆடும் பருவமழை… கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!

மேலும் அடுத்தக்கட்ட சுற்றுப்பாதையை உயர்த்தும் பணி TransLunar Injection (TLI), ஆகஸ்ட் 1, 2023 அன்று நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 1 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவத்துள்ளது. இதன்பிறகு சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கும். அங்கும் படிபடியாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டு இறுதியாக ஆகஸ்ட் 24ஆம் தேதி சந்திரயான் – 3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.