நில மோசடி வழக்கில் 'மைனா'தயாரிப்பாளர் கைது

பிரபு சாலமன் இயக்கத்தில் அமலா பால் நடித்த 'மைனா' படத்தை தயாரித்தவர் ஜான் ஜின்னி மேக்ஸ். அதன் பிறகு சாட்டை, சவுகார்பேட்டை, பொட்டு படங்களை தயாரித்தார். தற்போது நில மோசடி வழக்கில் ஜான் மேக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

2018ம் ஆண்டு திருவள்ளூரை அடுத்த மணவாளநகரைச் சேர்ந்த மோகனவேல் என்பவருக்கு வேப்பம்பட்டு ரேவதி நகரில் உள்ள 1,905 சதுர அடி கொண்ட காலி மனையை 9 லட்சத்துக்கு விற்றார். பின்னர் சில நாட்களுக்கு பிறகு மோகனவேலிடம் சென்று, அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதாக பொய் சொல்லி அவரிடம் இருந்து அசல் பத்திரத்தை வாங்கினார். பின்னர் மோகனவேலுக்கு தெரியாமல் அதே இடத்தை ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ் கிருஷ்ணன் என்பவருக்கு விற்றுள்ளார்.

இதனால் மோகனவேல் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதை தொடர்ந்து ஜான் ஜின்னி மேக்ஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.