87,599 எஸ் பிரஸ்ஸோ, ஈக்கோ கார்களை திரும்ப அழைக்கும் மாருதி சுசூகி

ஸ்டீயரிங் டை ராடில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக 87,599 எஸ் பிரஸ்ஸோ மற்றும் ஈக்கோ வேன்கள் திரும்ப அழைத்து இலவசமாக மாற்றித் தர மாருதி திட்டமிட்டுள்ளது.

மாருதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பாதிக்கப்பட்ட எஸ் பிரஸ்ஸோ மற்றும் ஈக்கோ வேன் மாடல் ஜூலை 5, 2021 மற்றும் பிப்ரவரி 15, 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்டதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது. “அத்தகைய வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஸ்டீயரிங் டை ராட்டின் ஒரு பகுதியில் ஏதேனும் குறைபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது அரிதான சந்தர்ப்பங்களில், உடைந்து, வாகனத்தின் திசையை மாற்றுவதற்கு மற்றும் கையாளுதலை பாதிக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளது.

மாருதி தனது டீலர் மூலம் பாதிக்கப்பட்ட வாகனங்களை ஆய்வு செய்து, பழுதடைந்த பகுதியை இலவசமாக மாற்றித் தரும் என்று குறிப்பிட்டுள்ளது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.