Ivana: எல்.ஜி.எம். படம் பார்த்த தோனி இவானாவிடம் எனக்கு உங்களின் கேரக்டர் பிடிக்கவில்லை என்று கூறினாராம்.
எல்.ஜி.எம்.கிரிக்கெட் வீரர் தோனி தனது தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருக்கும் முதல் தமிழ் படம் எல்.ஜி.எம்(Lets Get Married). ஜூலை 28ம் தேதி அந்த படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். முன்னதாக படக்குழுவுடன் சேர்ந்து படம் பார்த்த தோனிக்கு இவானாவின் கேரக்டர் பிடிக்கவில்லையாம்.உதயநிதி ஸ்டாலின்உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…இவானாதிருமணத்திற்கு பிறகு உன் அம்மா நம்முடன் சேர்ந்து இருக்கக் கூடாது என தன் காதலர் ஹரிஷ் கல்யாணிடம் கூறுவார் இவானா. அம்மாவையும், மகனையும் பிரிக்கும் பெண்ணாக இருக்கிறாரே என்று தான் தோனிக்கு இவானா மீது கடுப்பாம். இடைவேளையின்போது இவானாவை பார்த்து இந்த படத்தில் உங்களின் கதாபாத்திரம் எனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருக்கிறார் தோனி.
தோனிமுழு படத்தையும் பார்த்த பிறகே தோனிக்கு இவானாவின் கதாபாத்திரம் பிடித்ததாம். அம்மா, மகனை படத்தில் பிரிக்கப் பார்த்ததற்கே தோனி இப்படி டென்ஷனாகிறாரே. நிஜத்தில் எவ்வளவோ நடக்கிறது. தல இன்னும் பச்சப்புள்ளையாவே இருக்கிறார் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
சாக்ஷிSakshi Dhoni: தோனி மனைவி எந்த நடிகரின் ரசிகைனு பாருங்க: நீங்க வேற லெவல் ஜிஎல்.ஜி.எம். படத்தை விளம்பரம் செய்ய ஹைதராபாத் சென்றது படக்குழு. அப்பொழுது செய்தியாளர்களிடம் சாக்ஷி தோனி கூறிய விஷயம் ஆந்திரா, தெலுங்கானா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அவர் கூறியதாவது, நான் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகை. அவரின் படங்கள் பார்த்து வளர்ந்தவள். அவரின் அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன். அப்பொழுது எல்லாம் நெட்ஃப்ளிக்ஸோ, ஹாட்ஸ்டாரோ இல்லை. தெலுங்கு படங்களை இந்தியில் யூடியூபில் பார்த்தேன் என்றார்.
நதியாஎல்.ஜி.எம். படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் நதியா. இன்னும் எப்படி மேடம் இளமையாகவே இருக்கிறீர்கள் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, ரசிகர்களின் அன்பு தான் காரணம் என ஒரே போடாக போட்டுவிட்டார். லவ் டுடே படம் மூலம் இவானாவுக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது. எல்.ஜி.எம். படமும் அவருக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக மக்கள்அது ஏன் தமிழ் படத்தை தயாரித்திருக்கிறீர்கள் என முன்பு தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, ஐபிஎல் துவங்கி நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட ஆரம்பித்ததும் தமிழக மக்கள் என்னை தத்தெடுத்துக் கொண்டார்கள். அந்த அன்புக்காக தான் தமிழ் படத்தை தயாரித்திருக்கிறேன் என்றார். தமிழ் மக்கள் தன்னை பாசமாக தல என்று அழைப்பதை பேட்டிகளில் பெருமையாக கூறி வருகிறார் தோனி.
யோகி பாபுமுன்னதாக சென்னையில் நடந்த எல்.ஜி.எம். படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட தோனி தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். சென்னை அணியில் தனக்கு வாய்ப்பு கொடுக்குமாறு யோகி பாபு கேட்க, ராயுடு ஓய்வு பெற்றதால் காலி இடம் இருக்கு. ஆனால் உங்கள் கால்ஷீட் இல்லையே. இருந்தாலும் இது குறித்து நிர்வாகத்திடம் பேசுவோம் என்றார். மேலும் கேக் வெட்டி யோகி பாபுவை பார்க்க வைத்து சாப்பிட்டு அவரை பார்த்து க்யூட்டாக சிரித்தார் தோனி. அந்த வீடியோ வெளியாகி வைரலானது.
Dhoni: என்னை சி.எஸ்.கே.வில் சேர்த்துக்கோங்கனு கேட்ட யோகி பாபு: நச் பதில் அளித்த தோனி