புதுடில்லி: நடப்பாண்டின் முதல் காலாண்டில், மின்னணு பொருட்களின் ஏற்றுமதி, 56 சதவீத உயர்வை கண்டு, நாட்டின் நான்காவது பெரிய ஏற்றுமதி துறையாக முன்னேறியுள்ளது.
மின்னணு பொருட்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில், 36,533 கோடி ரூபாயாக இருந்தது.
தற்போது, இது 56 சதவீதம் அதிகரித்து, 57,220 கோடி ரூபாயாக உள்ளது. இதன் வாயிலாக, மின்னணு துறை, நாட்டின் நான்காவது பெரிய ஏற்றுமதி துறையாக முன்னேறிஉள்ளது.
மேலும், தற்போது மூன்றாவது பெரிய ஏற்றுமதி துறையாக உள்ள, நவரத்தினங்கள், தங்க ஆபரணங்களின் ஏற்றுமதி, அடுத்த காலாண்டுகளில், ஏற்றம் காணவில்லை என்றால், மின்னணு துறை, 3வது இடத்திற்கு முன்னேறும் என்று கருதப்படுகிறது.
மத்திய அரசின், ‘உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்பு’ திட்டத்தால், மொபைல் போன்களின் ஏற்றுமதி, அதிகரித்துள்ளது.
இதனால், மின்னணு துறையின் ஏற்றுமதியும் அதிகரித்துஉள்ளது.
கடந்த 15 மாதங்களில், நாட்டின் மொத்த மின்னணு பொருட்களின் ஏற்றுமதியில், மொபைல் போன்களின் பங்கு மட்டும் 52 சதவீதம்ஆகும்.
இதன் மதிப்பு, 30,000 கோடி ரூபாய்ஆகும்.
அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் (2023-24)
1) பொறியியல் பொருட்கள்2) பெட்ரோலிய பொருட்கள்3) நவரத்தினங்கள் மற்றும் தங்க ஆபரண பொருட்கள்
4) மின்னணு பொருட்கள் — ஆப்பிள் ஐபோன்’ ஏற்றுமதி (2023—24) 35%மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 66%மொத்த மொபைல் போன் ஏற்றுமதியில்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்