வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: ‘டுவிட்டர்’ சமூக வலைதளத்தின், ‘லோகா’ எனப்படும் சின்னத்தை, நீலநிற பறவையில் இருந்து, கறுப்பு – வெள்ளை, ‘எக்ஸ்’ எழுத்துக்கு மாற்றினார், அதன் உரிமையாளரான எலன் மஸ்க்.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/Tamil_News_large_3385454.jpg)
உலகெங்கும் மிகவும் பிரபலமான டுவிட்டர் சமூக வலைதளத்தை, உலகின் பெரும் பணக்கார தொழிலதிபரான எலன் மஸ்க் கடந்தாண்டு வாங்கினார். அதில் இருந்து நிர்வாகம் உள்ளிட்டவற்றில் பல மாற்றங்களை அவர் செய்து வருகிறார்.
சந்தையை விரிவுபடுத்தும் நோக்கத்தில், டுவிட்டர் சமூக வலைதளத்தின் லோகோவை மாற்றப் போவதாக அவர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதன்படி, நீலநிற பறவை சின்னத்தை மாற்றி, கறுப்பு பின்னணியில் வெள்ளை நிறத்தில் ‘எக்ஸ்’ என்ற ஆங்கில எழுத்து அடங்கிய புதிய சின்னத்தை எலன் மஸ்க் நேற்று அறிமுகம் செய்தார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள டுவிட்டர் தலைமையகத்தில், எக்ஸ் குறியீடு பிரதிபலிக்கும் புகைப்படத்தையும் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.
![latest tamil news](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/07/gallerye_061917583_3385454.jpg)
எக்ஸ் என்ற ஆங்கில எழுத்துக்கும், மஸ்க்குக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தன் விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என, அவர் பெயரிட்டுள்ளார்.
ஆன்லைன் நிதி சேவை அளிக்கும் வகையில், ‘எக்ஸ் டாட் காம்’ என்ற பெயரில் நிறுவனத்தை, ௧௯௯௯ல் அவர் துவங்கினார். அது, தற்போது, ‘பே பால்’ என்றழைக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement