சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் ரிலீஸ் ஆனதில் இருந்து 10 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மாவீரன்சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ள படம் ‘மாவீரன்’. மடோன் அஸ்வின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீசான இந்தப்படம் பல தரப்பிலிருந்தும் பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இந்நிலையில் ‘மாவீரன்’ படம் வெளியாகி 10 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனை மீட்ட மாவீரன்சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரின்ஸ்’ படம் கடுமையான தோல்வியை தழுவியது. இதனையடுத்து தற்போது வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படம் சிவகார்த்திகேயனை ‘பிரின்ஸ்’ தோல்வியிலிருந்து மீட்டுள்ளது.
மாவீரன் பட சர்ச்சை’மண்டேலா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின், தனது இரண்டாவது படைப்பாக ‘மாவீரன்’ படத்தை இயக்கியுள்ளார். பேண்டஸி ஜானரில் உருவான இந்தப்படம் வெளியானதில் இருந்தே கொரியன் படத்தின் காப்பி என சர்ச்சைகள் எழுந்தது. மேலும், இந்தப்படத்தின் கதை தன்னுடையது என்றும் ஒருவர் புகார் அளித்தது பரபரப்பை கிளப்பியது.
வசூல் சாதனைஇந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘மாவீரன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்று வருகிறது. இந்நிலையில் படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி உலகளவில் இதுவரை ரூபாய் 75 கோடி வரை இந்தப்படம் வசூல் செய்துள்ளதாக புதிய போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.
100 கோடி கிளப்’மாவீரன்’ ரிலீஸ் ஆவதற்கு முன்பாக ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்வியை இந்தப்படம் சரிக்கட்டும் என சிவகார்த்திகேயனுடன் நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். கடைசியில் ‘மாவீரன்’ பட விஷயத்தில் அவர் சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், ‘மாவீரன்’ படம் விரைவில் 100 கோடி கிளப்பிலும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.