வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால்: லஞ்சபணத்துடன் லோக்ஆயுக்தா போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கிய வருவாய்த்துறை அதிகாரி லஞ்சபணத்தை வாயில் போட்டு மென்று தின்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று வாயிலிருந்து லஞ்சபணத்தை போலீசார் எடுத்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டம் காடனி தாலுகா கிராம பயனாளி ஒருவர் தன் விவசாய நிலத்திற்கு உரிமை மாற்றம் தொடர்பாக , கஜேந்திரசிங் என்ற வருவாய்த்துறை அதிகாரியை அனுகினார். அந்த அதிகாரி ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக ஜபல்பூர் மாவட்ட லோக் ஆயுக்தா (லஞ்ச ஒழிப்பு) போலீசாரிடம் புகார் அளித்தார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த பயனாளியிடம் ரகசிய மை தடவிய லஞ்சம் பணம் ரூ. 4.500 ஐ பயனாளியிடம் கொடுத்து அனுப்பினர்.
|
அவரும் லஞ்சபணத்தை வருவாய்த்தறை அதிகாரியிடம் கொடுத்தார் அப்போது மறைந்திருந்த லோக்ஆயுக்தா போலீசார் பட்வாரி கஜேந்திர சிங்கை கையும் களவுமாக பிடித்தனர்.
உடனே பதறிப்போன அந்த அதிகாரி கையில் வைத்திருந்த லஞ்சபணம் ரூ. 4,500 ஐ வாயில் போட்டு வெற்றிலையை மெல்லுவது போல் மென்று தின்றார். இதை கவனித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து உடனடியாக அருகே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று லஞ்ச பணத்தை சக்கையாக வெளியே எடுக்க வைத்தனர். இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement