Upcoming Honda Elevate mileage – ஹோண்டாவின் எலிவேட் எஸ்யூவி காரின் மைலேஜ் விபரம் வெளியானது

வரும் செப்டம்பர் மாதம் விலை அறிவிக்கப்பட உள்ள ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் எலிவேட் எஸ்யூவி காரின் மைலேஜ் விபரம் வெளியாகியுள்ளது. தற்பொழுது இந்த மாடலுக்கு முன்பதிவு நடைபெற்று வருகின்றது.

மிக கடுமையான போட்டியாளர்களை எதிர்கொள்ளுகின்ற எலிவேட் காருக்கு சவால் விடுக்கும் வகையில், C-பிரிவில் கிடைக்கின்ற  ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வேகன் டைகன், மற்றும் எம்ஜி ஆஸ்டர் உள்ளிட்ட பல்வேறு எஸ்யூவிகளுடன் வரவிருக்கும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது.

Honda Elevate Fuel Efficiency

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரின் பரிமாணங்கள் 4,312mm நீளம், 1790mm அகலம், 1,650mm உயரம் மற்றும் 2,650mm வீல்பேஸ் கொண்டு 458 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் ஸ்பேஸ் மற்றும் 220mm கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றுள்ளது.

1.5-லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 4300rpm-ல் 121hp பவர், மற்றும் 145Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் என இரண்டு விதமான ஆப்ஷனை கிடைக்கின்றது.

எலிவேட் காரின் எரிபொருள் திறன் புள்ளிவிவரங்களை ஹோண்டா பகிர்ந்துள்ளபடி, மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற எலிவேட் 15.31 kmpl மற்றும் CVT கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் 16.92 kmpl வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் SV, V, VX மற்றும் ZX என மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் வரவுள்ளது. டாப் வேரியண்டில் ADAS பாதுகாப்பு நுட்பத்தை பெறுகின்றது.

honda elevate rear view

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.