Vijay – பைக்ல வந்தா கார்லதான் போகணும்.. விஜய்யின் நல்ல குணம்.. கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை: Vijay (விஜய்) நடிகர் விஜய் குறித்து இயக்குநர் ரமணா பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். படம் அக்டோபர் 19ஆம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது. படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கவிருக்கின்றன. விஜய்யும் விரைவில் டப்பிங் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் விஜய்.

திட்டவட்ட மறுப்பு: சூழல் இப்படி இருக்க விஜய் அரசியலுக்கு வரவிருப்பதால் வெங்கட் பிரபு படத்தில் நடித்த பிறகு மூன்று வருடங்கள் சினிமாவிலிருந்து ஓய்வு பெறவிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ஆனால் அந்தத் தகவலில் உண்மையில்லை என விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மேலும் விஜய் தொடர்ந்து நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதை திருமலை: விஜய் இப்போது டாப் ஹீரோவாக வளர்ந்து நிற்பதற்கு முக்கிய காரணமே அவர் கமர்ஷியல் பாதையில் பயணித்ததுதான். அப்படி அவரை முழுக்க முழுக்க கமர்ஷியல் ஹீரோவாக காட்டிய படங்கள் எத்தனையோ இருந்தாலும் அதில் திருமலை படத்துக்கென்று தனி இடம் உண்டு. கட்டுக்கடங்காத இளைஞராக தோன்றி அப்போதைய இளைஞர்களையும், சிறுவர்கள், சிறுமிகளையும் அசால்ட்டாக பிடித்துவிட்டார் விஜய்.

ரமணா பேட்டி: அந்தப் படத்தை இயக்கிய இயக்குநர் ரமணா ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “நான் ஒரு பைக் வைத்திருந்தேன். அதில் விஜய் வீட்டுக்கு சென்றுதான் அவரிடம் திருமலை கதையை கூறினேன். திருமலை படம் வெளியாகி மெகா ஹிட்டாகிவிட்டது. அப்போது ஒருநாள் விஜய் என்னை வீட்டுக்கு அழைத்தார்.

பணம் திணித்த விஜய்: அப்போது பெரிய தொகையை என்னிடம் கொடுத்தார். ஆனால் நானோ எனக்கு சம்பளம் வந்துவிட்டது இதெல்லாம் வேண்டாம் என்றேன். இருந்தாலும் விடாப்பிடியாக எனது கையில் அந்தத் தொகையை திணித்தார். அதனையடுத்து அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு ஒரு கார் வாங்கிவிட்டு மீண்டும் விஜய் வீட்டுக்கு சென்று அதை காட்டினேன். உடனே விஜய் வாங்க ஒரு ரவுண்டு போகலாம் என கூறி அதில் நானும் அவரும் சென்றோம்.

பைக்ல வந்தா கார்ல போகணும்: அதன் பிறகு அவருடன் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு புறப்படும்போது எனது மேனேஜரிடம் முதன்முறையாக ரமணா இந்த வீட்டுக்கு பைக்கில் வந்துதான் கதை சொன்னார். இப்போ கார்ல போறார். எனது வீட்டுக்கு பைக்கில் வருபவர்கள் திரும்பி செல்லும்போது காரில் செல்ல வேண்டும் என சொன்னார்” என்று ரமணா அந்தப் பேட்டியில் தெரிவித்தார். இதனைப் பார்த்த விஜய் ரசிகர்கள் எங்கள் தளபதிக்கு எப்போதுமே தனி மனது என கமெண்ட் செய்து அந்தப் பேட்டியை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.