கிச்சா சுதீப் இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான கன்னட படம் ஹெப்புலி. அந்த படத்தில் சுதீப் வைத்திருந்த ஹேர்ஸ்டைல் பிரபலமானது.
“கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ஹெப்புலி ஹேர்ஸ்டைலுக்கு மாறினார்கள். ஒரு புதுப்படம் ரிலீஸாகும்போது ஹீரோவின் ஹேர்ஸ்டைலை பார்த்து பலரும் முடிவு வெட்டுவது வழக்கம் தான். அடுத்த படம் வந்ததும் ஹேர்ஸ்டைலை மாற்றிவிடுவார்கள். ஆனால் ஹெப்புலி படம் ரிலீஸாகி 6 ஆண்டுகளாகியும் சுதீப் ஹேர்ஸ்டைல் மீதான கிரேஸ் இன்னும் குறையவில்லை.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
பள்ளி மாணவர்களுக்கு ஹெப்புலி ஹேர்ஸ்டைல் மீது அப்படி ஒரு பிரியம். இந்நிலையில் தான் கர்நாடக மாநிலம் பகல்கோட் மாவட்டம் ஜமகண்டி தாலுகாவில் இருக்கும் குளஹள்ளி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சலூன் கடைக்காரருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அந்த கடிதத்தில் தலைமை ஆசிரியர் சிவாஜி நாயக் கூறியிருப்பதாவது,
எங்கள் பள்ளி மாணவர்கள் ஹெப்புலி ஹேர்ஸ்டைலில் வருகிறார்கள். இதனால் படிப்பில் கவனம் செலுத்தாமல் தலைமுடியில் தான் கவனம் அதிகம் இருக்கிறது. எந்த மாணவனாவது உங்கள் கடைக்கு வந்து ஹெப்புலி ஹேர்ஸ்டைலில் முடி வெட்டுமாறு உங்களை கட்டாயப்படுத்தினால் அவர்களின் பெயர்களை என்னிடமோ அவர்களின் பெற்றோரிடமோ தெரிவிக்கவும். அவர்களுக்கு சாதாரணமாக முடிவெட்டிவிடவும் என கூறியிருக்கிறார்.
இதற்கு சலூன் கடை உரிமையாளரான சன்னப்பா சித்தராமப்பா பதில் கடிதம் எழுதியிருக்கிறார். இனி எந்த மாணவருக்கும் ஹெப்புலி ஹோர்ஸ்டைலில் முடிவெட்ட மாட்டேன். மேலும் எந்த பட ஹீரோ ஸ்டைலிலும் முடி வெட்ட மாட்டேன் என சித்தராமப்பா தன் பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தலைமை ஆசிரியர் சிவாஜி நாயக் கூறியிருப்பதாவது,
பொதுத்தேர்வுகளில் எங்கள் பள்ளி மாணவ, மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வந்தார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்துவிட்டது.
டிவி நிகழ்ச்சிகள், படங்கள், ஃபேஷன் டிரெண்டுகளால் ஈர்க்கப்பட்டு படிப்பில் கவனம் இல்லாமல் இருக்கிறார்கள் மாணவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. மாணவர்களின் கவனத்தை படிப்பின் பக்கம் திருப்பவே இப்படியொரு கடிதம் எழுதினேன் என்றார்.
சிவாஜி நாயக்கின் அண்ணன் கர்நாடக மாநில காவல் துறையில் பணியாற்றி வருகிறார். மற்றொரு சகோதரர் ராணுவத்தில் இருக்கிறார். சிவாஜி நாயக் கடந்த ஏழு ஆண்டுகளாக குளஹள்ளி அரசு பள்ளியில் வேலை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தன் பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் பட ஹீரோக்களை போன்று முடிவெட்டுவதில் கவனம் செலுத்துவது சிவாஜி நாயக்கை கவலை அடைய செய்திருக்கிறது. இந்த ஹேர்ஸ்டைல் விவகாரம் குறித்து சக ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் பேசிய பிறகே சலூன் கடைக்காரருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
Dhoni: ஹீரோவாக நடிக்க தோனி ரெடி, ஆனால்…: மனைவி சாக்ஷி
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண ஒரு வழி இருக்கிறது. மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்துமாறு கிச்சா சுதீப் சொல்ல வேண்டும். அவர் சொன்னால் கண்டிப்பாக இந்த ஹெப்புலி ஹேர்ஸ்டைல் பிரச்சனைக்கு உடனே தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் கன்னட சினிமா ரசிகர்கள்.
இதற்கிடையே ஒரு ஹீரோவின் ஹேர்ஸ்டைலால் இவ்வளவு பிரச்சனையா என பலரும் வியந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.