சென்னை:
கருணாநிதி பெயர் வைக்க சரியான இடம் டாஸ்மாக் தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளர்
பேசியிருப்பது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் கட்டப்பட்ட புதிய நூலகத்திற்கு கலைஞர் பெயர் சூட்டப்பட்ட விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் இவ்வாறு கூறினார்.
இதுகுறித்து செய்தியாளர்களை இன்று சந்தித்து சீமான் கூறியதாவது:
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் இருந்த பிரதமர்களிலேயே மிக மோசமான பிரதமர் நரேந்திர மோடிதான். அதேபோல, மிக மோசமான முதல்வர் மு.க. ஸ்டாலின் தான். திமுகவின் இரண்டாண்டு ஆட்சி ஏதோ 2 ஆயிரம் ஆண்டு ஆட்சி போல உள்ளது. குலை அறுத்து விட்டார்.
இந்தியாவிலேயே மிக மோசமான நிர்வாகத்தை தந்த பிரதமர் மோடி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஊர் ஊரா போறவனுக்கு நாடோடி என்றும் பெயர் வைக்கலாம். மோடி என்றும் பெயர் வைக்கலாம் என்பது போல ஆகிவிட்டது. கவனமா இருங்க. இந்தியாவை இன்னும் ஒரு முறை அவர் கிட்ட கொடுத்துட்டா அப்புறம் நாம வேற கிரகத்துக்குதான் போகணும்.
இன்று கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம்.. 4 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து சொன்ன மோடி!
எல்லாத்துக்கும் கருணாநிதி பெயரை தான் வைக்கிறீங்க. ஏன் அப்படி செய்றீங்க? இப்போ மதுரையில் கட்டப்பட்ட நூலகத்திற்கும் அவர் பெயரைதான் வெச்சிருக்கீங்க. ஏன் அவருக்கு முன்னாடி யாரும் தமிழ் எழுதலையா? தமிழ்நாட்டில் கருணாநிதி பெயர் வைக்கணும்னா அதுக்கு சரியான இடம் டாஸ்மாக் தான். இவ்வாறு சீமான் பேசினார்.