தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை கொட்டப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை நேரத்தில் மழை பெய்து வருவதால், பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்பவர்கள், அலுவலகம் செல்கிறவர்கள், தொழில் நிமித்தம் வெளியே செல்பவர்கள் என பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா மற்றும் பல்வேறு வட மாநிலங்களில்
கொட்டித் தீர்த்து வருகிறது. கர்நாடகாவில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியை திருவிழாவாக மாறிய Happy salai நிகழ்ச்சி…
தெலங்கானா மாநிலத்திலும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை மாநகர் முழுவதும் பல இடங்களில் லேசான தூறல் இருந்து கொண்டே உள்ளது. இதனால் வெப்பம் முற்றிலும் தணிந்து இரு நாள்களாக ஜில் கிளைமேட் நிலவுகிறது.