நடிகை: எமி ஜாக்சன் புது காதலர் எட் வெஸ்ட்விக்கை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான எமி ஜாக்சன். விஜய், தனுஷ், ரஜினி என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
வெளிநாட்டு நடிகையான இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய காதலனுடன் இணைந்து குழந்தையை பெற்றுக்கொண்டார்.
எமி ஜாக்சன்: ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான மதராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் க்யூட்டான வெள்ளைக்காரப் பெண்ணாக நடித்திருந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து விக்ரமுடன் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
ஆண் குழந்தை: தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் நடித்து தொழிலதிபரை காதலித்து கொண்டிருந்த எமி திருமணம் செய்துக்கொள்ளாமலே ஆண் குழந்தை பெற்றேடுத்தார். இதையடுத்து, எமி ஜாக்சன் தனது காதலின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமிருந்து நீக்கினார்.
ஹாலிவுட் நடிகர்: தற்போது பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரை எமி ஜாக்சன் காதலித்து வருகிறார். காதலருடன் இந்தியா வந்துள்ள எமி ராஜஸ்தான், உதய்ப்பூர், மும்பை, மஹாராஸ்டிரா, டெல்லி போன்ற ஊர்களில் உள்ள ஹேட்டல், மசாஜ் சென்டர் என இடங்களில் இருவரும் ஜோடியாக சுற்றித்திரிந்து வருகிறார்.
விரைவில் திருமணம்: இந்நிலையில், எமி ஜாக்சன் தனது காதலரை திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. எட்வெஸ்ட் விக் என் உணர்வுகளுடன் இணைதுள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருக்கிறோம். நான் நடித்துள்ள தமிழ் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. என் மகன் உலகை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக படப்பிடிப்புக்கு அழைத்து சென்றேன் என்று எமி கூறியுள்ளார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.