சென்னை: நடிகை பிரியா வாரியர் ஜாக்கெட் விளம்பரத்திற்கு போஸ் கொடுப்பது போல ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
இந்திய சினிமாவையே கலக்கிய காந்த கண்ணழகி பிரியா பிரகாஷ் வாரியர். மலையாளத்தில் ரிலீசான ஒரு அடர் லவ் படத்தில் பள்ளி படிக்கும் மாணவியாக நடித்திருந்தார்.
பருவ காதலை தனது காதலனுக்கு கண்ணாலேயே புரிய வைத்த அந்த காதல் வைரஸ், அந்த ஒரே படத்திலேயே செம ஹிட்டாகி விட்டார்.
ப்ரியா வாரியர்: 2018-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபராக மாறிய ப்ரியா வாரியருக்கு தெலுங்கில் செக், இஷாக் ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு கன்னடம், இந்தி பட வாய்ப்புக்கள் கிடைத்தது. இந்தியில் அவர் நடித்துள்ள ஸ்ரீதேவி பங்களா திரைப்படம் ஏதோ சில காரணத்தால் வெளியாகாமல் உள்ளது.
ப்ரோ: தற்போது இவர் தெலுங்கில் உருவாகி உள்ள ப்ரோ திரைப்படத்தில் நடித்துள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடித்த வினோதய சித்தம் தெலுங்கில் ‘ப்ரோ’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இதில் சமுத்திரக்கனி நடித்த கதாபாத்திரத்தில் பவன் கல்யாணும், தம்பி ராமையா கதாபாத்திரத்தில் சாய் தேஜ் நடிக்கின்றனர். இப்படம் வரும் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இதுதான் புதுசு: இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொள்ள வந்த ப்ரியா பிரகாஷ் வாரியர் ஜாக்கெட் விளம்பரத்திற்கு வந்தது போல முன்னாடி ஓபன் வைத்து வந்து இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்ஸ் பின்னாடி ஜன்னல் வைத்து ஜாக்கெட் போடுவது எல்லாம்பழசு.. இதுதான் புதுசு என ரசிகர்கள் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.
அடிக்கடி வெளிநாட்டிற்கு வெக்கேஷன் சென்று புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்ட ப்ரியா வாரியருக்கு, அண்மையில்,நண்பர்களுடன் தாய்லாந்து வெக்கேஷன் சென்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார். இன்ஸ்டாகிராமில் 7.5 மில்லியன் ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர்.