சென்னை: மாமன்னன் படம் சாதி வெறியை தூண்டுகிறது என்று தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி தேவர் பேட்டியில் கூறியுள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியானத் திரைப்படம் மாமன்னன். இப்படம் வெளியீட்டுக்கு முன் பலவிதமான சர்ச்சையில் சிக்கி இத்திரைப்படம், வெளியீட்டுக்கு பின்பு இணையத்தில் பேசு பொருளானது.
இந்நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எம்.சௌத்ரி தேவர் எமது ஒன் இந்திய தமிழ் சேனலுக்கு பிரத்யே பேட்டி அளித்துள்ளார். அதில் மாரி செல்வராஜின் மாமன்னன் படம் குறித்து பேசிய அவர், பெரும்பாலான படங்களில் நடுத்தர மக்கள் தலித்துகளை இழிவுப்படுத்துவதாகவும், கொடுமைப்படுத்துவது போல படம் எடுப்பது ஏன் என்றார்.
முன் எப்போதே நடந்த விஷயத்தை இப்போது படமாக எடுத்து, இப்போது உள்ள இளைஞர்களிடம் சாதிய எண்ணத்தை தூண்டி விடுகிறார்கள். இப்போது உள்ள சமூதாயத்தில் அனைவரும் சமமாக பார்க்கப்படுகின்றனர். ஆனால், இப்போது வந்து சேர் தரவில்லை, ஸ்டூல் தரவில்லை, உங்கரவிடவில்லை என்று படம் எடுப்பது சின்னபிள்ளைத் தனமாக இருக்கிறது என்றார்.