ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த துணிவு படத்தை அடுத்து அவர் நடிக்கும் படம் விடாமுயற்சி.
“கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !
மகிழ்திருமேனி இயக்கத்தில், லைகா நிறுவன தயாரிப்பில் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு மே மாதம் துவங்கும் என்றார்கள். அதன் பிறகு ஜூன் மாதம் முதல் வாரம் என்றார்கள். இல்லை இல்லை ஜூன் இறுதி வாரம் என்றார்கள். ஜூனும் இல்லை ஜூலை மாதம் புனேவில் படப்பிடிப்பு துவங்குகிறது என்றார்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஜூலை மாதமும் முடியப் போகிறது. இதற்கிடையே தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் உலக டூர் கிளம்பிவிட்டார் அஜித்.
அவர் செல்லும் நாடுகளில் எல்லாம் அஜித்துடன் சேர்ந்து ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இதெல்லாம் நல்லாத் தான் இருக்கு ஏ.கே., ஆனால் விடாமுயற்சி அப்டேட் எப்போ தான் வரும் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை துவங்குகிறார்கள் என தகவல் வெளியாகியிக்கிறது. இதற்கிடையை பைக் டூருக்காக வெளிநாட்டிற்கு சென்ற அஜித் குமார் இன்று சென்னை திரும்பினார்.
அவர் விமான நிலையத்தில் நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியிருக்கிறது. மேலும் அஜித்தை பார்த்ததும் ரசிகர்கள் சிலர் செல்ஃபி கேட்க அவரும் போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது.
அஜித் ஊர் திரும்பிவிட்டதால் அந்த சூட்டோடு படப்பிடிப்பை துவங்க முடிவு செய்திருக்கிறாராம் மகிழ்திருமேனி. ஆகஸ்ட் மாதமாவது படப்பிடிப்பு துவங்குமா இல்லை அஜித் குமார் மீண்டும் பைக் டூர் கிளம்பிவிடுவாரா என ரசிகர்கள் கவலையுடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விடாமுயற்சி படத்தில் அஜித் குமார் ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதற்கிடையே விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதாக வதந்தி வேறு பரவியது. விடாமுயற்சி படத்திற்கு என்ன ஆனது, யாராவது அப்டேட் கொடுங்களேன் என கேட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
அதை பார்த்து சினிமா ரசிகர்கள் பாவப்படுகிறார்கள். இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மாறினாலும் இந்த அஜித் ரசிகர்களின் பரிதாப நிலை மட்டும் மாறாமல் இருக்கிறதே என்கிறார்கள்.
முன்னதாக ஏ.கே. 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. அது குறித்து கடந்த ஆண்டே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஜனவரி மாதம் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டார் விக்னேஷ் சிவன். ஆனால் கடைசி நேரத்தில் அவரின் கதை பிடிக்கவில்லை என்று கூறி நீக்கிவிட்டார்கள்.
Dhoni: ஹீரோவாக நடிக்க தோனி ரெடி, ஆனால்…: மனைவி சாக்ஷி
விக்னேஷ் சிவனை நீக்கிய பிறகே மகிழ்திருமேனியை ஒப்பந்தம் செய்தார்கள். மகிழ்திருமேனி இன்னும் படப்பிடிப்பை துவங்கவில்லை. இதற்கிடையே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.
முன்னதாக விடாமுயற்சி பட வேலையை முடித்துக் கொண்டு நவம்பர் மாதம் பைக் டூர் கிளம்புவார் அஜித் என அறிவித்தார்கள். ஆனால் படப்பிடிப்பு துவங்குவதாக இல்லை. இந்நிலையில் திட்டமிட்டபடி நவம்பர் மாதம் அஜித் கிளம்பிவிடுவாரா இல்லையா என்று கேள்வி எழுந்துள்ளது.
படப்பிடிப்பு இருந்தால் அஜித் நிச்சயம் பைக் டூர் செல்ல மாட்டார். தயாரிப்பாளர் தன்னை நம்பி போடும் காசை வீணாக்காதவர் அஜித். அதனால் நடித்துக் கொடுத்துவிட்டுத் தான் கிளம்புவார்.