Kargil Victory Day Celebration: Tribute at the Memorial | கார்கில் வெற்றி தின கொண்டாட்டம்: நினைவிடத்தில் மரியாதை

புதுடில்லி: பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை விரட்டி அடித்த துணிச்சல் மிக்க கார்கில் போர் நினைவு நாளான இன்று லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில், பாதுகாப்பு அமைச்சர், முப்படை தலைமை தளபதி, ராணுவ தளபதி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

கார்கில் ஸ்ரீநகரில் இருந்து 210 கி.மீ., துாரத்தில் உள்ளது. இங்கு குளிர் காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழ் (-48 டிகிரி செல்சியஸ்) இறங்கிவிடும். இரு நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களும், ஒப்பந்தத்தின் அடிப்படையில், செப். 15 முதல் ஏப். 15 வரை கார்கில் மலைச் சிகரங்களில் இருந்து திரும்பி விடுவர். ஏப்ரலின் பிற்பாதியில் வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணிகளை தொடர்வது வழக்கம்.

நடந்தது என்ன

கடந்த 1999 ஏப்ரலில் கார்கிலில் மீண்டும் பாதுகாப்பு பணியை தொடர சென்ற இந்திய ராணுவத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாக்., ராணுவம், பயங்கரவாதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எல்லை தாண்டி இந்திய நிலைகளுக்குள் ஊடுருவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது திடீரென நடந்தது அல்ல, பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட ‘ஆப்பரேஷன் பாதர்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட அத்துமீறல் என்பதை இந்தியா உணர்ந்தது.

latest tamil news

பதிலடி:

பாக்., சதியை முறியடிக்க ‘ஆப்பரேஷன் விஜய்’ என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. வான்வழித் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம், தனது நிலைகளை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தது.தோல்வி உறுதியென தெரிந்த பின், ஆதரவு தேடி அமெரிக்காவுக்கு ஓடினார் அப்போதைய பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப். அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கை விமர்சிக்க, வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பின்வாங்க உடன்பட்டது. ஜூலை 26ல் இந்தியா, கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது.

latest tamil news

கார்கில் மாவட்டம் திராஸ், கச்சார், படாலிக் , துர்துக், ஆகிய பகுதிகளில் கடும் போர் நடந்தது. இதில் பாகிஸ்தான் படையினரை விரட்டி வெற்றி வாகை சூடிய நாள் இன்று (ஜூலை26) கடைபிடிக்கப்படுகிறது.

மரியாதை

latest tamil news

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, லடாக்கின் திராஸ் பகுதியில் அமைந்துள்ள கார்கில் போர் நினைவிடத்தில், பாதுகாப்புததுறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி மனோஜ் பாண்டே , கடற்படை தளபதி ஹரி குமார், விமானப்படை தளபதி விஆர் சவுத்ரி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

latest tamil news

போர் விமானங்கள் மூலம் அஞ்சலி

கார்கில் போர் நினைவிடத்திற்கு மேல், நான்கு மிக் 29 ரக போர் விமானங்கள் பறந்து அஞ்சலி செலுத்தின.

ராணுவத்திற்கு சொந்தமான சீட்டல் ஹெலிகாப்டர் போர் நினைவிடத்திற்கு மேல் பறந்து, மலர் தூவி மரியாதை செலுத்தின.

பிரதமர் அஞ்சலி

கார்கில் வெற்றி தினம், இந்தியாவின் அற்புதமான, துணிச்சலானவர்களின் வீர சாகசத்தை முன்னுக்கு கொண்டு வருகிறது. அவர்கள் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகமாக இருப்பார்கள். இந்த சிறப்பான நாளில், அவர்களுக்கு தலைவணங்குகிறேன். வாழ்க இந்தியா எனக்கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள போர் நினைவிடத்தில் ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.