வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: குஜராத்தை சேர்ந்த இஸ்லாமிய ஓவியர் அக்பர் மொமின், ஹிந்து கடவுளான அனுமாரின் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார். இதில் புதுமையாக அதன் கண்ணாடி பிம்பத்தில் கடவுள் ராமரின் உருவமாக தெரியும்படி அவர் வரைந்த நுட்பமான ஓவியம் வைரலாகியுள்ளது.
ஓவியங்களை கலைநயத்துடன் ரசித்து வரைவதை பார்த்திருப்போம். அந்த கலையிலும் புதுமையை புகுத்தி, வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்வது வெகுசிலரே.. ஒரு உருவத்தை அசல் போன்று பிரம்மிப்புடன் வரையும் ‘3டி’ வடிவிலான ஓவியத்திற்கு இன்றைக்கு ‘மவுசு’ அதிகமாகியுள்ளது.
அதிலும் எப்படி வித்தயாசத்தை காட்டுவது என யோசித்து அதனை செயல்படுத்தியும் காட்டியுள்ளார் குஜராத்தை சேர்ந்த 69 வயதான ஓவியர் அக்பர் மொமின்.
இஸ்லாமியரான இவர் ஹிந்து கடவுளான அனுமாரை ‘3டி’ ஓவியமாக தீட்டி அசத்தியுள்ளார். அதிலும் அந்த ஓவியத்தை கண்ணாடி முன்பாக காட்டினால், கடவுள் ராமரின் பிம்பம் தெரிகிறது. அதாவது ஒரே ஓவியத்தில் இரு வேறு கோணங்களில் இரு ஹிந்து கடவுள்களை வரைந்து அசத்தியுள்ளார் இஸ்லாமிய ஓவியர் அக்பர்.
இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல், முன்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரையும் சேர்ந்தும் ஒரே ஓவியமாக தீட்டியுள்ளார். ஓவியத்தில் பிரதமர் மோடியும், பிம்பத்தில் அமித்ஷாவும் தெரிவதுபோல் வரைந்து பிரமிக்க வைத்துள்ளார்.
இது தொடர்பாக ஓவியர் அக்பர் மொமின் கூறியதாவது: எனது ஓவியங்களுக்கு ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என்னை அழைத்து பாராட்டுகிறார்கள். பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷா ஆகியோர் குஜராத் வரும்போதெல்லாம் எனது ஓவியங்களை அவர்களுக்கு பரிசளிக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.
நான் ஒரு சாதாரண ஓவியன். ஒரு கலைஞனாக, எனது திறமையை வெளிப்படுத்த விரும்புகிறேன், எனவே நான் மோடி மற்றும் கடவுள் ராமரை தேர்ந்தெடுத்தேன். இதுவரை இந்தியாவில் யாரும் செய்யாத கலையை நான் உருவாக்கியதில் மகிழ்ச்சி.
ஒரு முஸ்லிமாக இருப்பதால் எனது கலைப்படைப்பு இரு சமூகங்களுக்கு இடையே பாலத்தை உருவாக்குகிறது என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement