ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மாடலை தொடர்ந்து மிக அமோகமான வரவேற்பினை பெற்றதாக ஹண்டர் 350 விளங்குகின்றது. விற்பனைக்கு வந்த 11 மாதங்களில் 2 லட்சம் வாடிக்கையாளர்களை இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளிலும் பெற்றுள்ளது.
கடந்த பிப்ரவரி 2023-ல் ஒரு இலட்சம் விற்பனை இலக்கை எட்டிய என்ஃபீல்டு ஹண்டர் 350 விரைவாக அடுத்த ஒரு லட்சம் இலக்கை கடந்துள்ளது.
RE Hunter 350
ஹண்டர் 350 வெற்றி குறித்து பேசிய ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.கோவிந்தராஜன் கூறியதாவது:
ஹண்டர் 350 பைக், சந்தேகத்திற்கு இடமின்றி, கடந்த வருடம் நடுத்தர மோட்டார்சைக்கிள் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட மிகவும் பிரசத்தி பெற்ற மோட்டார்சைக்கிள் ஆகும். ஹண்டர் விற்பனை துவங்கிய ஒரு வருடத்திற்குள், உலகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரைடர்களை கொண்ட பெருமைமிக்க சமூகத்தை பெற்றுள்ளதை கண்டு நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். இந்தியாவில் மட்டுமல்ல, சர்வதேச சந்தைகளிலும் ஹண்டர் 350 பிரபலமடைந்து வருகிறது.
புதிய J சீரிஸ் என்ஜின் பெற்ற ரோட்ஸ்டெர் ஹண்டர் மாடல் 349 cc சிங்கிள்-சிலிண்டர் OHC ஏர் மற்றும் ஆயில் கூல்டு எஞ்சினுடன் 6,100 rpm-ல் 20.2 PS பவர், 4,000 rpm இல் 27 Nm டார்க் வழங்குகின்றது. மேலும் இதில் ஐந்து வேக டிரான்ஸ்மிஷன் கொண்டதாக உள்ளது.
வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதிய புல்லட் 350 பைக் மாடலை ராயல் என்ஃபீல்டு வெளியிட உள்ளது.