ஆமதாபாத்: இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் போட்டி ஒருநாள் முன்னதாக அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 15 நவராத்திரி விழா துவங்குவதால், அன்றைய தினம் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ.,க்கு பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை வழங்கியுள்ளதன் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement