அரசியல்வாதி நடிகனாகும்போது, நடிகன் அரசியலுக்கு வரக்கூடாதா? : விஷால்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மரம் நடும் நிகழ்ச்சியில் நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க செயலாருமான விஷால் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார். நீங்கள் எப்போது வருவீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறியதாவது : “இங்குள்ள அனைவரும் அரசியல்வாதிகள் தான். குறிப்பாக சமூக அக்கறையுடன் செயல்படக் கூடிய அனைவருமே அரசியல்வாதிகள். அந்தவகையில் நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்து விட்டேன். மக்களுக்கு சேவை செய்வது தான் அரசியல்வாதிகளின் பணி. அரசியல் என்பது பிசினஸ் கிடையாது. நான் அரசியலுக்கு வருவது புதிது கிடையாது.

அரசியல்வாதிகள் நடிகர்களாக நடிக்கும்போது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது தப்பே கிடையாது. நடிகர்கள் அரசியலுக்கு வருவதும் பணம் சம்பாதிக வேண்டும் என்பதற்காக அல்ல, மக்களுக்கு மேலும் நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக” என்றார்.

நயன்தாரா தனது பட புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை. நடிகர் சங்க செயலாளராக உங்கள் பதில் என்ன என்று கேட்டபோது “நயன்தாரா எந்த சினிமா புரமோசன் நிகழ்ச்சிக்கும் வரமாட்டார் என்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம். அதேநேரத்தில் சம்பந்தப்பட்ட படங்களின் புரமோசன் நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் பங்கேற்க வேண்டும். அது அந்த தயாரிப்பாளருக்கு செய்யக் கூடிய உதவி என்பதே நடிகர் சங்கத்தின் நிலைப்பாடு” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.