கடலூர் என் எல் சி முற்றுகை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிடோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர்.அங்கு அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்து காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு […]