ஜெய்ப்பூர்:
நெற்றியில் குங்குமம் வைத்து வந்த காரணத்துக்காக இந்து மாணவன் மீது மற்றொரு தரப்பு மாணவர்கள் கொலைவெறி தாக்குதலை நடத்திய சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் நடந்த இந்த நிகழ்வானது தற்போது மதக்கலவரமாக வெடித்துள்ளது.
இந்தியாவில் சமீபகாலமாக மதரீதியான பாகுபாடுகளும், மோதல்களும் அதிக அளவில் நிகழ்வதை காண முடிகிறது. குறிப்பாக, பள்ளி – கல்லூரி மாணவர்கள் மத்தியில் இது அதிகரித்திருப்பது தான் மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
கடந்த ஆண்டு கூட முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியக்கூடாது எனக் கூறி கர்நாடகாவில் இந்து மாணவர்கள் நடத்திய போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுபோல பரவலாக நடந்து வரும் விஷயங்கள் நம்மை அச்சமடைய செய்கின்றன.
தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம்தான் ராஜஸ்தானில் நடந்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் அல்வரில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை பள்ளிக்கு வழக்கம் போல மாணவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஷுபம் ராஜ்புட் என்கிற 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் நெற்றியில் குங்குமத்துடன் பள்ளிக்கு வந்துள்ளான்.
அப்போது அங்கிருந்த மற்றொரு மதத்தைச் சேர்ந்த மாணவர்கள், ஷுபம் ராஜ்புட்டிடம் குங்குமத்தை அழிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு ஷுபம் ஒப்புக்கொள்ளதால் அவனை மற்ற மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ஷுபம் படுகாயம் அடைந்தார்.
ஸ்டாலின் வேதனை! அடுத்து பாஜக ஆட்சி அமைந்தால்.. தமிழகத்தில் முதல்வர், அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள்..
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேள்விப்பட்ட ஷுபம் ராஜ்புட்டின் உறவினர்களும், வலதுசாரி அமைப்பினரும் பள்ளிக்கு முன்பு குவிந்தனர். அந்த சமயததில், எதிர் தரப்பு மக்கள் ஏராளமானோரும் அங்கு வந்ததால் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு வந்து அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இருந்தபோதிலும், அங்கு இரு பிரிவினருக்கு இடையே மீண்டும் மோதல் வரும் சூழல் நிலவுவதால் அங்கு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த 25-ம் தேதி மற்றொரு அரசுப் பள்ளியிலும் இதுபோல குங்குமம், திருநீறு அணிந்து யாரும் வரக்கூடாது என ஒருதரப்பு மாணவர்கள் கூறி மிரட்டியுள்ளனர். ஆனால், அடுத்த நாள் முதல் அனைத்து இந்து மாணவர்களும் நெற்றியில் குங்குமம் வைத்து வந்ததால் மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.