சூர்யா உடன் இணைந்து நடிக்கும் துல்கர் சல்மான்
நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் சூர்யா. இது சூர்யாவின் 43வது படமாக உருவாகிறது. 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இந்த படத்தில் சூர்யா உடன் இணைந்து மலையாள நடிகர் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வருகின்ற டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ள இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.