தனுஷ் 51வது பட அறிவிப்பு
நடிகர் தனுஷ் கேப்டன் மில்லன் படத்தை முடித்துவிட்டு தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இதை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ஏசியன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என இரண்டு வருடங்களுக்கு முன்பே அறிவித்தனர்.
இந்த நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷ் 51வது படமாக சேகர் கம்முலா இயக்கும் படம் உருவாகிறது என்றும், இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா நடிப்பதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடுதலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.