ராமேஸ்வரத்தில் ”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சற்றுமுன் தொடங்கி வைத்தார். இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டார்.
மணிப்பூரில் தொடர்ந்து வெடிக்கும் வன்முறை… விரைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!
அரசியல் யாத்திரை
அப்போது பேசுகையில், இந்த யாத்திரை வெறும் அரசியல் யாத்திரை மட்டுமல்ல. என் மண் என் மக்கள் யாத்திரை தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்காக யாத்திரை. அதுமட்டுமின்றி குடும்ப அரசியல், ஊழல், சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஆகியவற்றில் இருந்து தமிழக மக்களை விடுவிக்கக் கூடிய யாத்திரை.
அண்ணாமலை நடைபயணம்
ஊழலை முடிவுக்கு கொண்டு வரவும், வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கவும் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. மேலும் பிரதமர் மோடியின் தேசியவாதத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கப் போகிறார் அண்ணாமலை. உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் என்று ஐ.நாவில் பேசிய முதல் தலைவர் பிரதமர் மோடி என்று சுட்டிக் காட்டினார்.
ஊழல் கட்சிகள்
நலத்திட்டங்களுக்கு பெயரை மாற்றி உங்கள் பெயரை வைத்து கொள்வதால் எதுவும் நடந்துவிடப் போவதில்லை. திமுகவும்,
கட்சியும் பொதுமக்களை சந்தித்தால் காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், நீர்மூழ்கி கப்பல் ஊழல், இஸ்ரோ ஊழல் உள்ளிட்டவை தான் மக்களின் நினைவில் தோன்றும்.
இலங்கை தமிழர்கள்
இலங்கையில் கொத்து கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். தமிழக மீனவர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு
வும், காங்கிரஸ் கட்சியும் தான் பொறுப்பு. நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள். திமுக மிகப்பெரிய ஊழல் கட்சி. அவர்களது அமைச்சர் ஒருவர் ஊழல் குற்றச்சாட்டின் காரணமாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்டாலின் சீக்ரெட்
அவர் சிறையில் இருந்த போதிலும் இன்னும் அமைச்சராக தொடர்கிறார். அவரை ராஜினாமா செய்யுமாறு ஸ்டாலின் கேட்கவே இல்லை. அதற்கு காரணம் ஸ்டாலினை பற்றிய ரகசியங்களை அந்த அமைச்சர் வெளியிட்டு விடக் கூடாது என்பதற்காக தான் என்று அமித் ஷா கூறினார்.