Harley X440 – அதிகப்படியான வரவேற்பினால் ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 முன்பதிவு நிறுத்தம்

அதிகப்படியான வரவேற்பின் காரணமாக வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை மட்டுமே ஹார்லி-டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெறும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகச்சிறிய, குறைந்த விலை ஹார்லிக்கு “மிகப்பெரும் வரவேற்பு” பெற்றுள்ளதாகவும், செப்டம்பர் மாதம் X440 தயாரிப்பை தொடங்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது இந்த மாடல் ராஜஸ்தானில் உள்ள நீம்ரானாவில் உள்ள அதன் ‘ ஹீரோ கார்டன் ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது.

Harley-Davidson X440

X440 பைக்கின் வாடிக்கையாளர் டீலர் மூலம் டெஸ்ட் டிரைவ் செப்டம்பர் 1 முதல் தொடங்கும், மேலும் , அக்டோபர் முதல் வாரத்தில் டெலிவரி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்பொழுது ஆகஸ்ட் 3 ஆம் தேதி முன்பதிவு நிறுத்தப்படுவதனால், மீண்டும் எப்பொழுது முன்பதிவு துவங்கும் என்ற தேதி குறிப்பிடப்படவில்லை.

ஹார்லி 440cc சிங்கிள் சிலிண்டர் ஏர் ஆயில் கூல்டு என்ஜின் 6000 rpm-ல் 27 bhp பவர் மற்றும் 38 Nm at 4000rpm டார்க் வழங்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.ஹார்லி எக்ஸ் 440 தோராயமான தமிழ்நாடு ஆன்-ரோடு விலை

X440 Denim ₹. 2,71,456 லட்சம்
X440 Vivid ₹. 295,540 லட்சம்
X440 S ₹. 3,25,645 லட்சம்

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.