நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் இணைந்து நடிக்கும் ‘ஜெயிலர்’ ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி இன்று சென்னையில் ‘ஜெயிலர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், இயக்குநர் நெல்சன், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அனிருத், ஜாக்கி ஷெராப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், விக்னேஷ் சிவன், அருண்ராஜா, VTV கணேஷ், சூப்பர் சுப்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு ரஜினி குறித்தும் ‘ஜெயிலர்’ படம் குறித்தும் பேசியுள்ளனர்.
ரசிகர்களின் ஆரவாரத்தோடு நடைபெற்று வரும் இவ்விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “முதல் நாள் ஷூட்டிங் அப்போ, நெல்சன் என்னிடம் வந்து ‘நீங்க யார சார் லவ் பண்ணீங்க ? எந்த ஹீரோயின் லவ் பண்ணீங்க ? என்றெல்லாம் கேட்டார். எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க என்று நெல்சனிடம் கேட்டேன்.
அதுக்கு நெல்சன், ‘கதை தான் முடிவு பண்ணியாச்சு உங்களை சார்ஜ் ஏத்தணும்’ என்று சொன்னார்.
அதுக்காக நம்ம லவ் ஸ்டோரி சொல்லணுமா ? என்று கேட்டேன்.
நெல்சன் நல்ல நகைச்சுவையாகப் பேசுவார். ஆனால், டைரக்சன் என்று வந்துவிட்டால் ஹிட்லராக மாறிவிடுவார். என்ன வேண்டுமோ அதை வாங்காமல் விடமாட்டார்.
படத்துல பிளாக் காமெடி எல்லாம் இருக்கு. அதெல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. சீரியஸான சீன்ல எல்லாம் காமெடி பண்ணுவார் நெல்சன். ‘காவாலா’ சாங்க்ல எனக்கு நிறைய ஸ்டெப்ஸ் இருக்குனு பில்டப் கொடுத்து கூட்டிட்டு போனாங்க. ஆனா, ரெண்டே ஸ்டெப் கொடுத்துட்டு போதும்னு சொல்லிட்டாங்க. அன்னைக்கு ஃபுல்லா நான் தமன்னாக்கிட்ட பேசவே இல்ல.
‘மூன்று வருடங்களுக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன். சரியான கதையும் இயக்குனரும் அமையவில்லை. அதனால்தான் அண்ணாத்தக்குப் பிறகு இவ்வளவு இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
‘ஜெயிலர்’ அறிவிப்புக்குப் பிறகுதான் பீஸ்ட் வெளியானது. நிறைய பேர் என்னிடம் நெல்சனுக்குதான் படம் கொடுக்க வேண்டுமா என யோசிக்க சொன்னார்கள். ஆனால், எப்போதுமே ஒரு இயக்குநர் தோற்பதில்லை. அவர் எடுக்கும் சப்ஜெக்ட்டுகள்தான் தோற்கிறது.” என்றார்