Kamal: நாயகன் கமல் கேரக்டர் இவரோட Inspiration தான்… MS பாஸ்கர் சொன்ன டாப் சீக்ரெட்

சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் கமல்ஹாசன்.

1987ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்குப் பின்னர் கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாயகன் படத்தில் கமல் கேரக்டரின் Inspiration யார் என்ற ரகசியத்தை எம்.எஸ் பாஸ்கர் கூறியுள்ளார்.

நாயகன் கமல் கேரக்டர் Inspiration யார்..?: கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்திற்குப் பின்னர் மீண்டும் நடிப்பதில் பிஸியாகிவிட்டார் கமல்ஹாசன். ஏற்கனவே தொடங்கி கிடப்பில் இருந்த இந்தியன் 2 படத்தை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அதேபோல், பிரபாஸுடன் கல்கி, ஹெச் வினோத் இயக்கும் KH 233 படத்திலும் நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் மணிரத்னம் இயக்கும் KH 234 படத்திலும் கமல் கமிட்டாகியுள்ளார்.

கமல், மணிரத்னம் கூட்டணி இதற்கு முன்பாக ‘நாயகன்’ படத்தில் மட்டுமே இணைந்துள்ளது. 1987ம் ஆண்டு வெளியான இந்தப் படம் தமிழ் சினிமாவின் ‘காட்ஃபாதர்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கேங்ஸ்டர் வேலு நாயக்கர் கேரக்டரில் மாஸ் காட்டியிருந்தார் கமல்ஹாசன். மிக இளம் வயதிலேயே வேலு நாயக்கர் கேரக்டருக்காக வயதான கெட்டப்பில் நடித்து மிரட்டியிருந்தார்.

மும்பையில் டானாக வலம் வந்த வரதராஜ முதலியாரின் வாழ்க்கை பின்னணியாக வைத்து நாயகன் படத்தை இயக்கியிருந்தார் மணிரத்னம். கமலின் கேரக்டரும் வரதராஜ முதலியாரை அடிப்படையாக வைத்து வடிவமைக்கப்பட்டது தான் என்றாலும், அந்த வயதான கெட்டப் இன்னொரு பிரபலத்துடையது என சொல்லப்பட்டது. ஆனாலும், யார் அந்த பிரபலம் என்பது இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் தான், நாயகன் படத்தின் கமல் கெட்டப், எந்த பிரபலத்தின் சாயலில் உருவாக்கப்பட்டது என நடிகர் எம்.எஸ் பாஸ்கர் கூறியுள்ளார். காமெடி உட்பட பல கேரக்டர்களில் நடித்து வரும் எம்.எஸ் பாஸ்கர், சமீபத்தில் ஒரு பேட்டிக் கொடுத்திருந்தார். அதில் தான் நாயகன் படத்தின் கமல் கெட்டப் பற்றி விவரித்துள்ளார். பலரும் அது கமலின் அண்ணன் சாருஹாசனின் கெட்டப் என நினைத்தனர்.

ஆனால், அது மறைந்த பேராசிரியர் கே.அன்பழகனின் கெட்டப் தான் என்ற ரகசியத்தை போட்டுடைத்துள்ளார் எம்.எஸ் பாஸ்கர். கமலின் ஹேர்ஸ்டைல், நடை, கண்ணாடி, லுக் என அனைத்திலும் பேராசிரியரின் பிரதிபலிப்பு இருக்கும் என அடித்துக் கூறியுள்ளார் எம்.எஸ் பாஸ்கர். இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் பலரும், எம்.எஸ் பாஸ்கர் கூறுவது சரியாக இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.