Rajinikanth:சுமார் 3 ஆண்டுகள் கழித்து இமய மலைக்கு செல்லும் ரஜினி: ஆனால் முதல் முறையாக…

மகாஅவதாரமான பாபாஜியின் பக்தரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். 2010ம் ஆண்டுக்கு பிறகு அந்த வழக்கம் மாறியது. அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆண்டுதோறும் இமய மலைக்கு செல்ல முடியவில்லை.

“கோவம் வந்துச்சு..அங்க இருந்து கதை வந்துச்சு” Aneethi Team Interview !
பின்னர் காலா, 2.0 பட வேலை முடிந்ததும் இமய மலைக்கு சென்றார். கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் இமய மலைக்கு சென்றார். அதன் பிறகு அவர் சுமார் மூன்று ஆண்டுகளாக இமய மலைக்கு செல்லவில்லை.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ஆகஸ்ட் 6ம் தேதி இமய மலைக்கு கிளம்புகிறாராம் ரஜினி. பாபாஜி குகை, பத்ரிநாத், கேதர்நாத் ஆகிய இடங்களுக்கு செல்கிறார். ஒரு வாரம் காலம் அங்கிருந்துவிட்டு சென்னை திரும்புகிறாராம்.

வழக்கமாக இமய மலைக்கு செல்லும் போது துணைக்கு மகள் ஒருவரை அழைத்துச் செல்வார். பெரும்பாலும் மூத்த மகள் ஐஸ்வர்யா தான் அப்பாவுக்கு துணைக்கு செல்வார். இந்நிலையில் உடல்நல பிரச்சனை ஏற்பட்டு குணமடைந்த பிறகு முதல் முறையாக யார் துணையும் இல்லாமல் தனியாக செல்கிறாராம்.

லால் சலாம் பட வேலை முடிந்த பிறகு மாலத்தீவுகளுக்கு சென்றுவிட்டு வந்தார் ரஜினி. தொடர்ந்து படப்பிடிப்புகளில் இருந்ததால் சற்று ஓய்வெடுக்க சென்றவர் நேற்று தான் சென்னை திரும்பினார். மாலத்தீவுகளுக்கும் யாரையும் துணைக்கு அழைத்துச் செல்லாமல் தனியாக சென்று வந்தார். இந்நிலையில் இமய மலைக்கும் தனியாக செல்கிறார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் இயக்கி வரும் லால் சலாம் பட வேலையில் பிசியாக இருக்கிறார். அதனால் தான் அவர் ரஜினியுடன் மாலத்தீவுகளுக்கு செல்லவில்லை என்று கூறப்பட்டது. லால் சலாம் பட வேலை முடியாததால் இமய மலைக்கும் அவரால் செல்ல முடியாது என கூறப்படுகிறது.

Jailer:ஜுஜுபியில் வரும் களவாணி கண்ணையா விஜய்: ஹுகுமை அடுத்து புது பஞ்சாயத்து

ரஜினி தனியாக இமய மலைக்கு செல்வது ரசிகர்களை கவலை அடைய வைத்திருக்கிறது. இளைஞர்களுக்கு ஈடாகத் தான் இருக்கிறார் தலைவர். இருந்தாலும் யாரும் இல்லாமல் தனியாக அங்கு செல்வது பயமாக இருக்கிறது என ரசிகர்கள் தங்கள் கவலையை தெரிவித்துள்ளனர்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் பிரமாண்டமாக ரிலீஸாகவிருக்கிறது. பட ரிலீஸின்போது ரஜினி இமய மலையில் இருப்பார். அவர் சார்பில் மகள்கள் ஐஸ்வர்யாவும், சவுந்தர்யாவும் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுடன் சேர்ந்து ஜெயிலர் படத்தை பார்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth:ஜெயிலர் இசை வெளியீட்டு விழா: குட்டிக் கதையில் குட்டு வைக்கப் போகும் ரஜினி?

ஜெயிலர் படத்தை தன் ஸ்டைலில் காமெடி படமாக எடுத்திருக்கிறாராம் நெல்சன் திலீப்குமார். ஹுகும் பாடலில் வருவது போன்று படம் முழுக்க ரஜினி மாஸ் காட்ட மாட்டாராம். மாஸ் இல்லாவிட்டால் என்ன தலைவருக்கு காமெடி செய்ய சூப்பராக வரும். அதனால் ஜெயிலர் காமெடி படமாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. இது தலைவர் படம் தான் என்கிறார்கள் ரசிகர்கள்.

ரஜினியின் ஜெயிலர் தனியாக வரவில்லை. அதே ஆகஸ்ட் 10ம் தேதி ரஜினியின் ஜெயிலருடன் சேர்ந்து மலையாள ஜெயிலரும் ரிலீஸாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.