சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்து தற்போது உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். விஜய் டிவியில் மிமிக்ரி, டான்ஸ், தொகுப்பாளர் என பல திறமைகளை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்த சிவகார்த்திகேயன், தற்போது திரையுலகில் நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என வெற்றிகரமான நட்சத்திரமாக தடம் பதித்து வருகிறார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் தான் ‘மாவீரன்’ படம் வெளியானது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் ரிலீசான இந்தப்படம் ‘பிரின்ஸ்’ பட தோல்வியால் சரிவை சந்தித்த சிவகாத்திகேயன் மார்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது. பிரபல இயக்குனர் மிஷ்கின், அதிதி ஷங்கர், யோகி பாபு, சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானது ‘மாவீரன்’ படம்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படம் வெளியான பத்தே நாட்களில் ரூபாய் 75 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனையடுத்து தற்போது ‘எஸ்கே 21’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சந்தானம் ரசிகர்களுடன் அண்மையில் உரையாடிய போது சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சந்தானம் நடிப்பில் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ என்ற படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப்படத்திற்கான புரமோஷன் ஒன்றில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்தார் சந்தானம். அப்போது ரசிகை ஒருவர் உங்களை மாதிரியே சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து வந்தவர். அவருடைய வெற்றியை எப்படி பார்க்குறீங்க என கேட்டார்.
மகானை தொடர்ந்து ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் அதே காரியத்தை செய்த விக்ரம்: ரசிகர்கள் ஷாக்.!
இதற்கு பதிலளித்த சந்தானம் ரொம்ப சந்தோஷமா இருக்கு. இவ்வளவு பெரிய இடத்துக்கு இவ்வளவு சீக்கிரம் வந்து நிற்கிறது ரொம்ப பெரிய விஷயம். அதுக்கு அவரை பாராட்டனும். அந்தளவு கடினமான உழைப்பு மற்றும் பொறுப்போட எல்லாத்தையும் பண்ணிட்டு இருக்காரு. சிவகார்த்திகேயன் மாதிரி நெறைய பேர் அடுத்தடுத்து வந்துட்டு இருக்காங்க. புகழ், பாலான்னு நிறைய பேர் வர்றாங்க. டிவில இருந்து சினிமாவுக்கு வந்து ஜெயிக்கிறது பெருமையான விஷயம் என தெரிவித்துள்ளார் சந்தானம்.
சிவகார்த்திகேயனை பாராட்டி சந்தானம் பேசியுள்ள இந்த பேட்டி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் ‘எஸ்கே 21’ படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ‘எஸ்கே 21’ படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Captain Miller Teaser: ப்ரேமுக்கு ப்ரேம் மிரட்டல்.. கொல மாஸ்: கேப்டன் மில்லராக மிரள விடும் தனுஷ்.!