ஜெயிலர் படத்திற்கு யுஏ சான்று
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி, சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, அனிருத், இயக்குனர் நெல்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படம் திரைக்கு வருவதற்கு இன்னும் 13 நாட்கள் இருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் சென்சார் சான்று குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதில், ஜெயிலர் படத்திற்கு தணிக்கை குழு யுஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.