புது சீரியலில் கமிட்டாகியுள்ள நவீன் : ஹீரோயின் யார் தெரியுமா?
கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான 'இதயத்தை திருடாதே', 'கண்ட நாள் முதல்' தொடர்களில் நடித்து சின்னத்திரையில் ஹீரோவாக பிரபலமானார் நவீன். செய்திவாசிப்பாளர் கண்மணியை திருமணம் செய்து கொண்ட அவர் குடும்பம், குழந்தை என நடிப்புக்கு சிறிய கேப் விட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம். இவருக்கு ஜோடியாக தெலுங்கில் மல்லி என்ற தொடரில் நடித்து வரும் நடிகை பாவனா லஸ்யா நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது. நவீனுடைய இந்த கம்பேக்குக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.