மதம் மாறிய இந்திய பெண் அஞ்சுவுக்கு நிலம், பரிசுகள் வழங்கிய பாகிஸ்தான் தொழிலதிபர்

பெஷாவர்: இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் அஞ்சு தனக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தான் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்துகொண்ட நிலையில் அவருக்கு ரொக்கப் பரிசு, நிலம் இன்னும் பிற பரிசுகளைக் கொடுத்துள்ளார் பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் மோசின் கான் அப்பாஸி.

இவர் பாக் ஸ்டார் குரூப் நிறுவனங்களின் தலைவராவார். அஞ்சு தற்போது ஃபாத்திமா என பெயர் மாற்றம் செய்துள்ளார். இது குறித்து மோஷின் கான் கூறுகையில், “அஞ்சுவுக்கு 10 மார்லா நிலம். பாகிஸ்தான் ரூபாய் 50 ஆயிரம், இன்னும் சில பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளேன். அஞ்சுவுக்கு இப்போது ஃபாத்திமா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அஞ்சு இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வந்து முஸ்லிமாக மாறியுள்ளார். அவரை வரவேற்கும் விதமாகவே இந்த பரிசுங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவரைப் பாராட்டும்விதமாக இதை நான் செய்துள்ளேன்” என்றார்.

நடந்தது என்ன? உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவை திருமணம் முடித்துள்ளார். முன்னதாக, தங்களுக்குள் காதல் இல்லை என்று நஸ்ருல்லா தெரிவித்த நிலையில் செவ்வாய் கிழமை இவர்களது திருமணம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், அஞ்சு இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிறகு நஸ்ருல்லாவை திருமணம் செய்துகொண்டார் என்றும், தற்போது பாத்திமா என்ற புதிய பெயரை வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் சொல்லப்படுகிறது. இருவரின் திருமணம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல் திர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தில் சட்டப்படி திருமணம் செய்துகொண்டனர்.

மேல் திர் மாவட்ட மூத்த காவல் அதிகாரி முஹம்மது வஹாப், இந்த திருமணத்தை உறுதிப்படுத்தியதோடு, “நஸ்ருல்லா மற்றும் அஞ்சுவின் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது, மேலும் அவர் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு முறையான நிக்காஹ் நடத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளார். இருவரும் திருமணத்துக்கு எடுத்துள்ள வீடியோ ட்விட்டரில் வைரலானது.

மகளை சாடிய தந்தை: இதனிடையே, திருமணம் தொடர்பாக பேசிய அஞ்சுவின் தந்தை கயா பிரசாத் தாமஸ், “இரண்டு குழந்தைகளையும், கணவனையும் விட்டுவிட்டு அஞ்சு ஓடிய விதம் கவலை அளிக்கிறது. தன் குழந்தைகளை நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதை செய்ய வேண்டுமானால் முதலில் தன் கணவனை விவாகரத்து செய்திருக்க வேண்டும். தனது குழந்தைகள் மற்றும் கணவரின் எதிர்காலத்தை அவள் அழித்துவிட்டாள். எங்களை பொறுத்தவரை அஞ்சு இனி உயிருடன் இல்லை” என்று வேதனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.