மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் ஆண்டு தோறும் பள்ளி மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24 நிதியாண்டுக்கான உதவித்தொகை பெறுவதற்கான யசஸ்வி நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதாவது விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9,11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும் என்றும் 9,10ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75,000 வரையிலும், 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியத் தேர்வு முகமை நடத்தும் யசஸ்வி (YASASVI) நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த நுழைவுத் தேர்விற்கு ஆகஸ்ட் .
10ம் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஆகஸ்ட் 12 முதல் 16ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்துத் தேர்வு செப்டம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் என்றும் விண்ணப்பத்துடன் கைப்பேசி எண். ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து தேர்வு செய்யப்படும் மாணவ மாணவிகளுக்கு செப்டம்பர் 29 ஆம் தேதி தேர்வுகள் நடைபெறும். அதில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு பிரதமரின் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.