2026 வரை லம்போர்கினி ரிவில்ட்டோ சூப்பர் கார் விற்று தீர்ந்தது

கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட லம்போர்கினி நிறுவனத்தின் புதிய சூப்பர் கார் Revuelto ஆனது தற்பொழுது வரை நடைபெற்ற முன்பதிவு மூலம் 2026 வரை விற்று தீர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய ரிவில்ட்டோ காரில் முதன்முறையாக பிளக் இன் ஹைபிரிட் பெற்ற லம்போர்கினி முதல் மாடலாகும்.

Lamborghini Revuelto

லம்போர்கினியின் ரிவில்ட்டோ மாடலில் 6.5 லிட்டர் V12 பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 814 bhp மற்றும் 725 Nm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இது மூன்று மின்சார மோட்டார்கள் (முன்பக்கத்தில் இரண்டு மற்றும் பின்புறம் ஒன்று) இணைந்து மொத்த வெளியீட்டை 1,001 bhp ஆக வழங்குகின்றது. வெறும் 2.5 வினாடிகளில் 0-100 kmph நேரத்தையும், அதிகபட்ச வேகம் 350 kmph கொண்டுள்ளது.

3.8 kWh லித்தியம்-அயன் பேட்டரி மூலம், Revuelto 10 கிலோமீட்டர் மின்சார ஓட்டும் வரம்பையும் கொண்டுள்ளது.

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இதன் விலை 10 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.