India TV-CNX Opinion Poll predicts Modi-led NDAs massive victory over Opposition if Lok Sabha polls held now | லோக்சபா தேர்தல் கருத்துக்கணிப்பு : பா.ஜ., கூட்டணிக்கே அதிக வாய்ப்பு; தமிழகத்தில் திமுக கூட்டணி முந்தும்

புதுடில்லி: தற்போதைய சூழலில் தேர்தல் நடத்தினால் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே அதிக வெற்றி பெறும் சூழல் உள்ளதாக பிரபல நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திமுக கூட்டணி தமிழகத்தில் 30 தொகுதிகளை கைப்பற்றாலாம் என்றும் , காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் இங்கு பெரும் சரிவை சந்திக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா டிவி, சி.என்.எக்ஸ் ., நிறுவனங்கள் இணைந்து மொத்தம் உள்ள 534 தொகுதிகளில் 265 தொகுதிகளில் இந்த கணிப்பை எடுத்துள்ளது. ஏனைய தொகுதிகளில் விரைவில் எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதுடில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம், பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தகுதி வாய்ந்த வாக்காளர்களிடம் பல்வேறு அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது.

கணிப்புகள் நடத்தப்பட்ட 265 தொகுதிகளில் 144 தொகுதிகள் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கும், எதிர்கட்சியியான இந்தியா கூட்டணிக்கு 85 தொகுதிகளும், ஏனைய கட்சிகள் 36 தொகுதிகளிலும் வெற்றி பெறலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் வாரியாக பா.ஜ.,வின் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு கிடைக்கும் தொகுதிகள் விவரம் வருமாறு:

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் காங்கிரசுக்கு பெரும் செல்வாக்கு குறைந்துள்ளது. இதனால் மொத்தம் 25 தொகுதிகளில் 21 தொகுதிகள் தே.ஜ., கூட்டணிக்கும், எஞ்சிய 4 தொகுதிகள் மட்டும் காங்கிரசுக்கு கிடைக்கும் .

பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தம் 29ல் 24 தே.ஜ., கூட்டணிக்கும், 5 காங்கிரஸ் கூட்டணிக்கும், தமிழகத்தில் மொத்தம் 39 -ல் 30 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி பிடிக்கும் , எஞ்சிய 9 தொகுதிகள் பா.ஜ., மற்றும் சில உதிரி கட்சிகளுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்

இது போல் பீகாரில் (மொத்தம் 40)ல் தே.ஜ., கூட்டணிக்கு 24, இந்தியா கூட்டணிக்கு 16 தொகுதிகளும், ஆந்திரபிரதேசத்தில் மொத்தம்( 25)ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் -18 லும், தெலுங்குதேசம்- 7-லும் வெற்றி பெறலாம். காங்கிரசுக்கும், பாஜ.,வுக்கும் தற்போதைய நிலவரப்படி பூஜ்யமே.

தெலுங்கானாவில் (மொத்தம்17 ) , ஆளும் பாரத்ராஷ்ட்டிரிய சமிதி கட்சிக்கு 9 தொகுதிகளும், தேசிய ஜனநாயக கூட்டணி 6 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணிக்கு 2 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும்.

பஞ்சாபில் ஆம்ஆத்மிக்கு பெரும் வாய்ப்பு

ஆம்ஆத்மி ஆளும் பஞ்சாபில் மொத்தம் ஆம்ஆத்மி கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும், இது போல் டில்லியில் பா.ஜ.,வுக்கு 5 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 2 தொகுதிகளும் கிடைக்கும் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.