சென்னை: ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவில்லை என்றும் ரம்யா கிருஷ்ணன் தான் நடித்துள்ளாரா என்கிற கேள்வியே ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு பின்னர் எழுந்துள்ளது.
தொலைந்து போன தனது மகனை தேடும் தந்தையின் கதையாகவே ஜெயிலர் கதை உள்ளதாகவும் பேரன் உடன் ரஜினிகாந்த் இருக்கும் காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
இந்நிலையில், ஜூலை 28ம் தேதி நடந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் போது, “நீலாம்பரி முன்னாடி இந்த படையப்பா மானமே போச்சு” என பேசியுள்ளார்.
விக்ரம் கதை தான் ஜெயிலர் கதையா?: கமல்ஹாசன் நடித்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த விக்ரம் படத்தில் தனது மகன் காளிதாஸ் வில்லன்களிடம் சிக்கி கொலை செய்யப்படுவதும், பேரனை பாதுகாக்கும் பொறுப்புடன் எதிரிகளை துவம்சம் செய்வதுமாக கதை அமைந்திருக்கும்.
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மகனை கடத்தி விடுவார்கள் என்றும் பேரனை பார்த்துக் கொண்டே மகனை கண்டுபிடிக்கும் முத்துவேல் பாண்டியனாக ரஜினி நடித்துள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.
நீலாம்பரியுடன் மீண்டும்: 1999ம் ஆண்டு வெளியான படையப்பா படத்தில் ரஜினிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார். அதன் பின்னர் 2002ல் வெளியான பாபா படத்தில் நீலாம்பரியாகவே ஒரு சின்ன ரோலில் கேமியோவாக வந்து சென்றிருப்பார்.
அதன் பின்னர் இத்தனை ஆண்டுகள் கழித்து ஜெயிலர் படத்தில் மீண்டும் ரம்யா கிருஷ்ணன் உடன் நடித்த அனுபவத்தையும் தான் பல்பு வாங்கிய அந்த விஷயத்தையே ரஜினி மேடையில் பேச அனைவருமே ஆடிப் போய் விட்டனர்.
அசிங்கப்பட்ட படையப்பா: ஒரு சீன்ல ரம்யா கிருஷ்ணன் உடன் நடிக்கணும், சின்ன சீன் தான்.. ஆனால், அவங்களை ஃபேஸ் பண்ணி நடிக்கணும், 8 டேக் வாங்கிட்டேன். என்ன படையப்பா நீலாம்பரிக்கிட்ட போய் இப்படி அசிங்கப்படுறீயேன்னு நினைச்சிட்டேன் என ரஜினிகாந்த் பேசியதும் ரம்யா கிருஷ்ணன் சிரித்தே விட்டார்.
இயக்குநர் நெல்சன், கலாநிதி மாறன் மற்றும் நேரு ஸ்டேடியத்தில் இருந்த அனைவருமே இந்த வயதிலும் சிங்கிள் டேக் ஆர்ட்டிஸ்ட் என ரஜினிகாந்த் பேசி தன்னுடைய கெத்துக் காட்டாமல் உண்மையை பேசி அசால்டு காட்டுகிறாரே என வியந்தே போய்விட்டனர்.
ஜெயிலர் படத்தில் மீண்டும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள் என்பது கன்ஃபார்ம்.