ஜெயிலர் இசை வெளியீட்டு விழாரஜினியின் நடிப்பில் நெல்சனின் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரையில் வெளியாகின்றது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினி, நெல்சன் என அனைவரும் மேடையில் பல விஷயங்களை பேசினர். குறிப்பாக ரஜினி சூப்பர்ஸ்டார் டைட்டில், நெல்சனுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது போன்ற பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். அந்த விஷயங்கள் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கின்றது
நெல்சனின் கதைஅண்ணாத்த படத்திற்கு பிறகு சரியான கதை எனக்கு அமையவில்லை. ஒரு சில இயக்குனர்களிடம் கதை கேட்டேன். கதையின் ஒன் லைன் நன்றாக இருந்தாலும் முழு கதையையும் அவர்கள் சொல்லும் போது ஏதோ ஒன்று குறைவதாக நான் எண்ணினேன். அந்த சமயத்தில் தான் நெல்சனிடம் நான் கதை கேட்டேன். அவரின் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். எனவே அவரிடம் கதையை கேட்டேன். என்னிடம் ஒன் லைன் ஒன்றை கூறினார். நன்றாக இருந்ததை அடுத்து முழு கதையையும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பத்து நாட்களில் சொல்றேன் என்றார் நெல்சன் என ரஜினி பேசியுள்ளார்
பீஸ்ட் விமர்சனம்பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு நெல்சன் என்னிடம் ஜெயிலர் படத்தின் முழு கதையையும் சொன்னார். கதை மிகவும் அருமையாக இருந்தது. நானும் ஓகே சொன்னேன். இதையடுத்து தான் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே விநியோகஸ்தர்கள் பலர் என்னை தொடர்புகொண்டு பீஸ்ட் சரியாக போகவில்லை. இயக்குனரை மாற்றிவிடுங்கள் என்றார்கள். இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் டீமுடன் ஒரு மீட்டிங் நடந்தது என்றார் சூப்பர்ஸ்டார்
ரஜினியின் நம்பிக்கைபீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை அடுத்து அனைவரும் நெல்சன் வேண்டாம் என்றார்கள். இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்துடன் ஒரு மீட்டிங் நடைபெற்றது. அந்த மீட்டிங்கில், பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்று வருகின்றது.இருந்தாலும் அந்த படம் யாருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. அனைவர்க்கும் லாபகரமான படமாகவே தான் அமைந்துள்ளது என்றனர். எனவே தான் நெல்சனின் மீது முழு நம்பிக்கை வைத்து நான் ஜெயிலர் படத்தில் நடிக்க துவங்கினேன் என்றார் சூப்பர்ஸ்டார். இந்நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும்
ஜெயிலர் திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.