Leo: தாறுமாறாக என்ட்ரி கொடுத்த ஆண்டனி தாஸ்… வெளியானது லியோ சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ்!

சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ அக்டோபர் மாதம் வெளியாகிறது.

இந்தப் படத்தின் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

இந்நிலையில், சஞ்சய் தத்தின் 64வது பிறந்தநாளான இன்று, அவரது க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ள சஞ்சய் தத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ மிரட்டலாக உருவாகியுள்ளது.

வெளியானது லியோ சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ்: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சஞ்சய் தத், இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு திரை பிரபலங்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். இந்நிலையில் லியோ படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத்திற்கு தரமான ட்ரீட் ஒன்றை கொடுத்துள்ளது படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்து வரும் லியோ பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகும் லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.

விஜய்யின் பிறந்தநாளில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டது. அதன்பின்னர் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில். தற்போது சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான இந்த வீடியோவில் சஞ்சய் தத்தின் கேரக்டர் பெயரையும் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஆண்டனி தாஸ் என்ற கேரக்டரில் நடித்துள்ள சஞ்சய் தத், நடிப்பிலும் மிரட்டியுள்ளார்.

 Leo: Sanjay Dutt Glimpse video release from Leo Film

முறுக்கிய மீசையுடன் டெரர் லுக்கில் காணப்படும் சஞ்சய் தத், வாயில் சிகரெட்டுடன் திரும்பி சலாம் போடுகிறார். அவரது பின்னணியில் மிகப் பெரிய கழுகு உருவம் உள்ளது. அனிருத்தின் பின்னணி இசையும் சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ் வீடியோவுக்கு செம்ம மாஸ் வைப் கொடுத்துள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை லோகேஷ் இன்னும் எகிற வைத்துவிட்டதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

லியோ படத்தில் விஜய்க்கு அப்பா கேரக்டரில் சஞ்சய் தத் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இவர் தான் கஞ்சா கடத்தல் கும்பலின் தலைவராக இருக்கும் எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், சஞ்சய் தத்தின் க்ளிம்ப்ஸ் வெளியானதால், இனி அடுத்தடுத்து லியோ பட அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இரு மாதங்களே உள்ளதால் விரைவில் டீசரை வெளியிட லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.