சென்னை: நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் கங்குவா. கங்குவா என்றால் நெருப்பின் மகன் என்று அர்த்தம்.
முன்னதாக அஜித்குமார், ரஜினி ஆகியோரை வைத்து கமர்ஷியல் படங்களை கொடுத்துள்ள இயக்குநர் சிவா, இந்தப் படத்தில் வரலாற்றுக் கதைக்களத்தை கையில் எடுத்துள்ளார்.
படத்தின் சூட்டிங் தற்போது கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது. நடிகர்கள் நட்டி நட்ராஜ், பாபி தியோல் ஆகியோர் இந்தப் படத்தின் வில்லன்களாக இணைந்துள்ளனர்.
கங்குவா கேமிராமேனால் மிரண்ட நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா, திஷா பட்டானி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வருகிறது கங்குவா படம். இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். 1500 ஆண்டுகளுக்கு முந்தை வரலாற்று பின்னணியை கதைக்களமாக கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் பார்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யா பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மிரட்டலாக அமைந்து ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரையும் கவர்ந்தது. இதேபோல பர்ஸ்ட் லுக் போஸ்டரும் மிரட்டலாக அமைந்தது. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை விரைவில் நிறைவு செய்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை துரிதப்படுத்த இயக்குநர் சிவா திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கேமராமேன் வெற்றி கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் சிறப்பான படப்பிடிப்பை எடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இவர் இந்த அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும் ஒரு லைட் கூட இல்லாமல் காட்சிகளை படமாக்கி படக்குழுவினரை குஷிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் வெளியான டீசரிலும் ஏராளமானோர் இடம்பெற்ற காட்சிகளில் இமேஜ் க்ளோனிங் முறையில்தான் அந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் வில்லனாக நடித்துவரும் நட்டி நட்ராஜ் ஒரு கேமராமேன் என்பதால், வெற்றி, சிங்கிள் லைட் இல்லாமல் படக்காட்சிகளை படமாக்கியது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் வெற்றியிடமே பல கேள்விகளை கேட்டு உறுதிப்படுத்தியுள்ளார். ஆனாலும் திருப்தி அடையாத அவர், சூர்யாவிடம் நேரடியாக சென்று தன்னுடைய சந்தேகத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து சூர்யாவிற்கும் இந்த சந்தேகம் ஏற்பட அவரும் நேரடியாக வெற்றியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். காட்சிகள் சரியாக வரவில்லை என்றால் பலரின் உழைப்பு வீணாவதுடன், ரீசூட் எடுப்பதும் சாத்தியப்படாது என்பதால் சூர்யா அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து சூர்யாவிடம் காட்சிகள் குறித்து விளக்கம் அளித்துள்ள வெற்றி, தான் எடுத்த காட்சிகளையும் அவருக்கு போட்டுக் காட்டியுள்ளார். அந்தக் காட்சிகளை பார்த்த சூர்யா, மிரண்டுவிட்டாராம். இதையடுத்து வெற்றிக்கு தன்னுடைய பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் சூர்யா. இந்தப் படம் வெளியானால், கதை மற்றும் காட்சி அமைப்புகள் மட்டுமின்றி விஷுவலாகவும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும் என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.