அஜித் படத்துக்கு முதல்நாள் காட்சி பார்க்க மாட்டேன் : வனிதா
வனிதா விஜயகுமார் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா குறித்த பல சுவாரசியமான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில் ‛‛ஜெயிலர், லியோ, விடாமுயற்சி, இந்தியன் 2'' இவற்றில் எந்த படத்திற்கு உங்கள் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த வனிதா, 'குழந்தையிலிருந்து நான் பார்த்த ரியல் சூப்பர் ஸ்டார் ரஜினி. கண்டிப்பாக முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன். அடுத்து லியோ. சொல்லவே வேண்டாம் விஜய் படத்தையும் முதல்நாள் முதல் காட்சி பார்ப்பேன்'. விடாமுயற்சி படம் யாருடையது என்று கேட்கிறார். அதற்கு பேட்டி எடுப்பவர் அது அஜித் சார் படம் என்று சொல்ல, 'சாரி எனக்கு தெரியாது. அஜித் ஒரு ஜென்டில்மேன் பழகுவதற்கு இனிமையானவர். ஷாலினியும் எனக்கு நெருங்கிய நண்பர். ஆனால், இதுவரை அஜித் படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்ததேயில்லை. கண்டிப்பாக போவேன். ஆனால், முதல் காட்சி பார்க்க வாய்ப்பில்லை. போனதாக பொய் சொல்லவும் விருப்பமில்லை. இந்தியன் 2 படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன்' என்று கூறியுள்ளார்.