தெலுங்கானாவில் கடந்த 4 நாட்களாக கொட்டி தீர்த்த கனமழையால் கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை தாண்டியுள்ளது.
வரலாறு காணாத மழைதெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து 60 சென்டி மீட்டருக்கு மேல் கொட்டி தீர்த்த மழையால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. முளுகு மற்றும் பூபாலப்பள்ளி மாவட்டங்களில் கொட்டிய மழையால் குடி இருப்பு பகுதிகளில் பல அடி உயரத்துக்கு வெள்ளம் சூழ்ந்தது.
அண்ணாமலையை கண்காணிக்கும் ரகசிய குழு… அமித்ஷாவுக்கு அனுப்பப்படும் சீக்ரெட் ரிப்போர்ட்?இயல்பு வாழ்க்கை முடக்கம்தெலுங்கானா மாநிலத்தில் திரும்பும் பகுதிகளில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் பெய்த மழையில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். நீர்நிலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல்வேறு சாலைகள் அடித்து செல்லப்பட்டன. இதனால் போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் பொய் பிம்பம் விரைவில் உடையும்… அந்தர்பல்டி அடித்த திருச்சி சூர்யா!கோதாவரி அபாயக்கட்டம்
பல்லாயிரக் கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் ஏக்கர் விளை பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி ஆர்பரித்து ஓடுகிறது. கோவில் நகரமான பத்ராசலத்தில் உள்ள கோதாவரி ஆற்றின் நீர்மட்டம் நேற்று மாலை 4 மணியளவில் 55.40 அடியாக இருந்தது.
இறுதி எச்சரிக்கை
இதனை முன்னிட்டு அங்கு மூன்றாவது மற்றும் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஆற்றின் நீர்மட்டம் 56 அடியை தாண்டியது. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆற்றின் நீர் ஊருக்குள் புகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கைஇதனிடையே ஜூலை 31 ஆம் தேதி வரை தெலுங்கானாவில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் ஆகஸ்ட் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் அடிலாபாத், கோமரம் பீம் ஆசிபாபாத் மற்றும் பிற மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதயத்தை நொறுக்கும் சம்பவம்… 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்ட உடல்!எச்சரிக்கை