அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஒன்றிய அரசு 9 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த பாவத்தை போக்குவதற்காகதான் அண்ணாமலை பாத யாத்திரை செல்வதாக கூறினார்
வலுவான இயக்கமாக உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் மட்டுமின்றி ஒன்றியத்திலும் அசைக்க முடியாத சக்தியாக உள்ளார் என்றும் தெரிவித்தார். தங்கக்கோட்டையாகவும் எஃகு கோட்டையாகவும் உள்ள திமுகவை, 2, 3 சதவீத வாக்குகள் வாங்கும் கட்சியுடன் ஒப்பிட கூடாது என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
மேலும் தங்கத்தை தகரத்துடன் ஒப்பிட வேண்டாம் என்று கூறிய அமைச்சர் சேகர் பாபு பாஜகவில் இருந்து எப்படிப்பட்ட ஜாம்பவான்கள் போட்டியிட்டாலும் தோல்விதான் பரிசாக கிடைக்கும் என்றும் தெரிவித்தார். புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுகதான் வெற்றி பெறும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிரதமர் மோடியே போட்டியிட்டாலும் திமுகவிடம் தோற்றுதான் போவார் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். முன்னதாக கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை தங்கசாலையில் ஜெயின் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சேகர் பாபு, கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.10 ஆயிரம், மற்றும் குழந்தைகளுக்கான பரிசு பெட்டகங்களை வழங்கினார்.