மக்களவை தேர்தல் 2024 நெருங்கி கொண்டிருக்கிறது. சரியாக சொல்ல வேண்டுமெனில் இன்னும் ஓராண்டிற்கும் குறைவான நாட்களே இருக்கின்றன. மொத்தம் 543 இடங்கள். இதற்காக 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் களம் காண்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி (INDIA) என இரண்டு பெரிய கூட்டணிகள் போட்டியிட தீவிரமாக தயாராகி வருகின்றன.
மக்களவை தேர்தல்இதில் NDA கூட்டணி மத்தியில் ஆளுங்கட்சியாக இருப்பதை கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் பார்த்திருப்பர். இந்தியா (INDIA) கூட்டணி சமீபத்தில் தான் உருவானது. இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு ஏன் காத்திருக்க வேண்டும். இன்றைய தேதிக்கு மக்களவை தேர்தல் நடத்தினால் யார் வெற்றி பெறுவார்கள்? என்ற கேள்வி எழுப்பி இந்தியா டிவி சார்பில் கருத்துக்கணிப்பு ஒன்று நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் தற்போது வெளியாகி பெரிதும் கவனம் பெற்றுள்ளன.கருத்துக்கணிப்பு முடிவுகள்அதில் NDA கூட்டணிக்கு 318 என்ற தனிப்பெரும்பான்மை மக்களவையில் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதில் பாஜகவிற்கு 290 இடங்கள் கிடைக்கும் எனவும், கடந்த தேர்தலுடன் (303) ஒப்பிடுகையில் சற்றே சரிவை சந்திக்கும் எனவும் தெரியவந்துள்ளது. எதிர்க்கட்சியாக INDIA கூட்டணிக்கு 175 இடங்கள் தான் கிடைக்க வாய்ப்பிருப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுதவிர மாநில கட்சிகள், சுயேட்சைகள் உள்ளிட்டோருக்கு 50 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.தமிழக களநிலவரம்மாநில வாரியாக பார்க்கும் போது தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 9 இடங்கள் கிடைக்குமாம். இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணிக்கு 30 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஆளும் திமுக கூட்டணிக்கு சற்று சரிவு தான். அதிமுக கூட்டணிக்கு சிறிய அளவிலான எழுச்சி என்று கூட சொல்லலாம்.
திமுக கூட்டணியின் பலம்ஏனெனில் 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ் அடங்கிய மதச்சார்பற்ற கூட்டணி 39 தொகுதிகளிலும் போட்டியிட்டது. அதில், திமுக 20, காங்கிரஸ் 8, இந்திய கம்யூனிஸ்ட் 2, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைகள் 2, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1, இந்திய ஜனநாயக கட்சி 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, மதிமுக 1 என 38 இடங்களில் வெற்றி பெற்றன.
அதிமுக கூட்டணியின் பலவீனம்மறுபுறம் 39 தொகுதிகளிலும் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக ஒரு இடத்தில் மட்டும் வென்றது. எஞ்சிய கட்சிகளான பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி ஆகியவை ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் இம்முறை அரசியல் களம் வேறு மாதிரியாக அமைந்துள்ளது.
மாறும் 2024 தேர்தல் களம்ஆளும் திமுக மீதான விமர்சனங்கள், ஒற்றை தலைமையுடன் புதிய உற்சாகத்துடன் விளங்கும் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் எழுச்சி, கூட்டணி மாறிய அரசியல் கட்சிகள் என சுவாரஸியத்தை கூட்டியுள்ளன. இதனால் வெற்றிகளும் மாறக்கூடும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.