தஞ்சை: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று தஞ்சையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.