ரூ. 3000 கோடி சொத்து: தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் யார்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க

Richest actor: ரூ. 3 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் தென்னிந்தியாவின் நம்பர் ஒன் பணக்கார நடிகர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்.

​ரஜினி​நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித் குமார், விஜய் ஆகியோர் படம் ஒன்றுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பல்வேறு தொழிகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். அதன் மூலமும் நிரந்தரமான வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் ரஜினியோ, கமலோ, அஜித்தோ, விஜய்யோ இல்லை என்பது தெரிய வந்திருக்கிறது.

​Dhanush:நாய், காக்கா என்ற ரஜினி: அன்றே சரியாக சொன்ன தனுஷ் எனும் தலைவர் ரசிகர்கள்உதயநிதி​உதயநிதியை பாராட்டிய பா.ரஞ்சித்…​​நாகர்ஜுனா​Nayanthara: முடியாதுனு சொல்லும் நயன்தாராவை கட்டாயப்படுத்த முடியாது: விஷால்அப்படி என்றால் முதல் ஆளாக படம் ஒன்றுக்கு ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய மெகாஸ்டார் சிரஞ்சீவியாகத் தான் இருக்கும் என நினைத்தால் அவரும் இல்லை. தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் நாகர்ஜுனா தான் தென்னிந்தியாவின் பணக்கார நடிகர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு ரூ. 3 ஆயிரம் கோடி ஆகும் என செய்திகள் வெளியாகியுள்ளது.

​நாகர்ஜுனாவின் சொத்துக்கள்​2022ம் ஆண்டில் நாகர்ஜுனாவின் சொத்துமதிப்பு ரூ. 3 ஆயிரத்து 10 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ஒன்றுக்கு ரூ. 20 கோடி வரை வாங்குகிறார் நாகர்ஜுனா. மேலும் விளம்பர படங்களில் நடிக்க ரூ. 2 கோடி வாங்குகிறார். சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை வைத்து மட்டும் அவர் பணக்காரர் ஆகவில்லை. அவர் ஒரு தொழில் அதிபர். அதுவும் திறமையான தொழில் அதிபர்.
​தொழில்கள்​Tamannaah: தமன்னாவின் ரூ. 2 கோடி வைர மோதிரம்: விஜய் என்ன இப்படி பொசுக்குனு கலாய்ச்சுட்டாருபல்வேறு தொழில்களில் முதலீடு செய்திருக்கிறார். தன் தந்தை நாகேஸ்வர ராவ் துவங்கிய அன்னபூர்ணா ஸ்டுடியோஸில் பார்ட்னராக இருக்கிறார் நாகர்ஜுனா. மேலும் ஹைதராபாத்தில் மீடியா ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகிறார். இது தவிர்த்து ஹைதராபாத்தில் கன்வென்ஷன் சென்டர் வைத்திருக்கிறார். மா டிவி சேனலை துவங்கினார். அதன் பிறகு அதை விற்றுவிட்டார். இப்படி பல்வேறு தொழில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தால் தான் நாகர்ஜுனாவின் சொத்து மதிப்பு ரூ. 3 ஆயிரம் கோடியை தாண்டியிருக்கிறது.

​வெங்கடேஷ்​பணக்கார தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பவர் தெலுங்கு நடிகரான வெங்கடேஷ். அவரின் சொத்துமதிப்பு ரூ. 2 ஆயிரத்து 200 கோடி ஆகும். இதையடுத்து ரூ. 1, 650 கோடி சொத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார் சிரஞ்சீவி. ரூ. 1, 370 கோடி சொத்துக்களுடன் நான்காவது இடத்தில் இருப்பது சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம் சரண்.
​விஜய்​பிரபல தெலுங்கு நடிகரான ஜூனியர் என்.டி.ஆரின் சொத்து மதிப்பு ரூ. 450 கோடி ஆகும். தளபதி விஜய்யின் சொத்துமதிப்பு ரூ. 445 கோடி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொத்துமதிப்பு ரூ. 430 தோடி. உலக நாயகன் கமல் ஹாசனின் சொத்துமதிப்பு ரூ. 338 கோடி ஆகும். மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் சொத்து மதிப்பு ரூ. 376 கோடி ஆகும். அல்லு அர்ஜுனிடம் ரூ. 350 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.